காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியின் 2020 புதிய மாணவர் அனுமதிக்கு விண்ணப்பம்கோரல்-


(பழுலுல்லாஹ் பர்ஹான்)


இலங்கையின் தென்  மாகாணத்தில்   அமையப்பெற்றுள்ள காலி இப்னு அப்பாஸ் அரபுக்கல்லூரியில் இன்ஷா அல்லாஹ் 2020ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பமாகும் புதியகல்வியாண்டிற்கான மேற்படிக் கல்லூரியின் சரீஆ (மௌலவி ஆலிம்) பிரிவு, அல்குர்ஆன் மனனப்பிரிவு என்பவற்றின் முதலாம் ஆண்டிற்கு புதிதாக மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளதாக காலிஇப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷேய்க் டப்ளியூ.தீனுல் ஹஸன் (பஹ்ஜி)தெரிவித்தார்.


மேற்படி விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, சரீஆ (மௌலவி ஆலிம்) பிரிவுக்கு15வயதிற்கிடைப்பட்ட தற்பொழுது 2019ம் ஆண்டு பாடசாலையில் 8ஆம் ஆண்டில் கல்வி கற்கும்அல்குர்ஆனைச் சரளமாக ஓதத் தெரிந்தவர்களும், அல்குர்ஆன் மனனப் பிரிவுக்கு13வயதுக்குட்பட்ட அல்குர்ஆனைச் சரளமாக ஓதத் தெரிந்த குறைந்தது தற்பொழுது 2019ம் ஆண்டுபாடசாலையில் 5ம் ஆண்டில் கல்வி கற்பவர்கள் ஆகியோர்  20-10-2019ம் திகதிக்கு முன்னர்விண்ணப்பிக்க முடியும்.

 

விண்ணப்பதாரி இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பதாயின் காலி இப்னு அப்பாஸ் அரபுக்கல்லூரியின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.ibnuabbas.org என்ற இணையத்தளத்தின்ஊடாக மிக இலகுவான முறையில் விண்ணப்பிக்க முடியும்.

 

அல்லது தபால் மூலம் விண்ணப்பதாயின் கட்டாயமாக விண்ணப்பதாரிகளின் முழுப் பெயர்,வயதுகல்வித் தரம்சேரவிரும்பும் பகுதி விலாசம்தொடர்பு கொள்ள வசதியான தொலைபேசிஇலக்கம் என்பன பற்றிய முழு விபரங்கள் அடங்கிய சுயமாகத் தயாரிக்கப்பட்டவிண்ணப்பங்களை -திபர்,இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரிபெஇல: 105,இல.50, ஹிரிம்புரகுறுக்கு வீதிகாலி என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க முடியும்.


மேலதிக விபரங்களுக்கு தொ.பே.இல. : 0912243672 , 0777921418,தொ.நகல்: 0912222037 ஈமெயில்:ibnuabbas.galle@gmail.com முகவரிக்கு தொடர்பு கொள்ள முடியும் எனவும் இப்னு அப்பாஸ் அரபுக்கல்லூரியின் அதிபர் அஷ்ஷேய்க் டப்ளியூ.தீனுல் ஹஸன் (பஹ்ஜி) மேலும் தெரிவித்தார்.

 

அத்தோடு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தமிழ் மொழியில் பரிச்சயம் ள்ளவர்களாக இருத்தல்வேண்டும்ன்ஷா அல்லாஹ் நேர்முகப் பரீட்சை 2019 நவம்பர்  மாதம் ஆரம்பத்தில் நடைபெறும்.


குறிப்பு இங்கு மாணவர்களுக்கு தகவல் தொழில் நுட்பக் கல்வி வழங்கப்படுவதுடன், மாணவர்கள்கல்விப் பொதுத் தராதர சாதாரண மற்றும் உயர் தர (கலைப் பிரிவு) பரீட்சைகளுக்கும்,அரசாங்கத்தின் அல்-ஆலிம்,தர்மாச்சாரய சான்றிதழ் பரீட்சைகளுக்கும்தயார்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.No comments