காத்தான்குடி அல்-மதரசதுல் ஹிக்மா பெண்கள் அரபுக் கல்லூரியின் முதலாவது ஆலிமா பட்டமளிப்பு விழா

ஏ.எல். டீன் பைரூஸ் காத்தான்குடி அல்-மதரசதுல் ஹிக்மா பெண்கள் அரபுக் கல்லூரியின் முதலாவது ஆலிமா பட்டமளிப்பு விழா.
(02.08.2019 வெள்ளி) கல்லூரியின் பணிப்பாளர் மெளலவி, அல்ஹாபிழ் NMM.நெளபர் (பலாஹி) தலைமையில்  சிறப்பாக இடம் பெற்றது.மேற்படி நிகழ்வின் சிறப்பு பேச்சாளராக ஏறாவூர் 
பாகியதுஸ்ஸாலிகாத்  அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் AHM. சாதிக் ஹஸறத் கலந்து சிறப்பித்ததுடன் சங்கைக்குரிய உலமாக்கள், பள்ளிவாயல் நிருவாகிகள், பெற்றோர்கள், மாணவிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.மேற்படி மதரசாவில் 4 வருட கற்கை நெறியினை பூர்த்தி செய்ய 24 ஆலிமாக்கள் இதன் போது சாண்றிதழ்கள், நினைவுச் சின்னம் வழங்கி பட்டம் பெற்று வெளியேறியதுடன், திருமணம் முடித்த 25 பெண்கள் இரண்டு வருட ஷரீஆ கற்கை நெறியினை பூர்த்தி செய்தவர்களுக்கும்  இதன் போது சாண்றிழ் வழங்கி கெளரவிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments