தள வைத்தியசாலையின் கொள்வனவுக்கு சம்மேளனம் ஒரு மில்லியன் ரூபா கடனுதவி


காத்தான்குடி தள வைத்தியசாலை A தரத்திற்கு  தரம் உயர்த்தப்பட்டதையடுத்து அங்கு அமையப்பெறவுள்ள வைத்திய  ஆலோசகர்களுக்கான (Consultant Quarters) வதிவிடக் கட்டடம்  அமைப்பதற்குரிய  காணியை கொள்வனவு செய்வதற்குரிய கடன் தொகையாக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினால் ரூபா ஒரு மில்லியன் நிதிக்கான காசோலை கடந்த 2019.08.26ஆம் திகதி  சம்மேளன தலைவர் அல்ஹாஜ்   MCMA. சத்தார் அவர்களினால் வைத்திய அத்தியட்சகரும் காத்தான்குடி தள வைத்தியசாலையில் அபிவிருத்திக் குழுவின் தலைவருமான Dr. MSM. ஜாபிர் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

மேற்படி வதிவிட கட்டிடத்தை அமைப்பதற்குரிய காணியை காத்தான்குடி தல வைத்தியசாலையில் அபிவிருத்தி குழுவினால் கொள்வனவு செய்யப்பட்டு குறித்த கட்டிடம் அமைக்கப்படவுள்ளது

No comments