பொறுமை, விட்டுக்கொடுப்பு, சகிப்புத்தன்மை, தியாகம் என்பவற்றை நம் வாழ்வில் வெளிப்படுத்துவதினூடாக முஸ்லிம் சமூகம் பற்றிய நல்லெண்ணத்தை உருவாக்குவோம் என்று முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தனது ஹஜ்ஜுப்பெருநாள் வாழ்த்தில் தெரிவித்துள்ளார்


தியாகத்தை நினைவுகூறும் ஹஜ்ஜுப்பெருநாளைக் கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய உள்ளங்களுக்கும் “ஈதுல் அழ்ஹா” ஹஜ்ஜுப்பெருநாள் “ஈத் முபாறக்” நல்வாழ்த்துக்கள் என்று தனது வாழ்த்துக்களை தெரிவிக்கும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மேலும் தெரிவிக்கையில் 

பல்லின மக்கள் வாழும் நம்நாட்டில் இன ஒற்றுமைக்காகவும் பரஸ்பர புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்காகவும் இந்த தியாகத்திருநாளின் படிப்பினைகளான பொறுமை, விட்டுக்கொடுப்பு, சகிப்புத்தன்மை, தியாகம் என்பவற்றை நம் வாழ்வில் வெளிப்படுத்துவதினூடாக முஸ்லிம் சமூகம் பற்றிய நல்லெண்ணத்தை உருவாக்குவோம். 

நாட்டின் தற்போதய சூழல் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்படுகின்ற ஓர் இக்கட்டான சூழலுக்குள் உள்வாங்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது ஆட்சியாளர்கள் யார் வந்தாலும் அவர்களது மனம்களையும் பெரும்பாண்மை சமூகத்தவர்களின் மனம்களை வெல்வதென்பது நமது நற்பண்புகளால் மாத்திரமே முடியும். 

அரசியல்ரீதியான முன்னெடுப்புக்கள் நமது சமூகத்தை பாதுகாக்கும் என்கின்ற சிந்தனைகளுக்கப்பால் நமது நல்ல செயல்கள் இறைவனின் உதவிகளை எங்களுக்கு கொண்டுவரும் என்ற நம்பிக்கையில் நமது வாழ்க்கைமுறையை மாற்றுவோம்.

குறிப்பாக நம் நாட்டு முஸ்லிம் சமுகத்தின் உரிமைகளுக்காகவும் பாதுகாப்புக்காகவும் பலஸ்தீன், காஷ்மீர், எமன், சிரியா போன்ற நாடுகளில் பல கஷ்டங்களோடு இந்த பெருநாளை கொண்டாடக்கூட முடியாமல் பல துன்பங்க்ளை அனுபவித்துக்கொண்டிருக்கும் எமது உடன்பிறவா சகோதரர்களுக்குவும் இந்த நன்னாளில் பிராத்திப்போம்.

No comments