அமைச்சர் றிசாத் பதியுதீனின் கட்சி அடிப்படைவாத மற்றும் ஒரு இனத்துக்குரியதுமான கட்சி அல்ல. அமைச்சர் பீ.ஹரிசன்தலைமை தாங்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி என்பது அடிப்படைவாத மற்றும் ஒரு இனத்துக்குரியதுமான கட்சி அல்ல என்பதற்கு அவரது கட்சியில் அங்கத்துவம் வகிக்கும் தமிழ்,சிங்களப் பிரதிநிதிகளை வைத்து அறிந்து கொள்ளமுடியுமென நீர்ப்பாசன,விவசாய,கிராமிய பொருளாதார கடற்றொழில் மற்றும் நீரியள்வளத் துறை அமைச்சர் பீ.ஹரிசன் மன்னாரில் தெரிவித்தார்.

முசலி பிரதேசத்தில் மறிச்சுக்கட்டியில் அமைக்கப்பட்ட கமநல சேவை நிலையத்தினை  திங்கட்கிழமை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.அமைச்சர் றிசாத் பதியுதீனின் அழைப்பின் பேரில் இங்கு வருகைத்தந்த அமைச்சர் ஹரிசன் மேலும் தமதுரையில் –

இந்த நாட்டில் அண்மைய சில மாதங்களுக்கு முன்னர் இடம் பெற்ற குண்டுத்தாக்குதலின் பின்னர் அதிகமாக பல தரப்பினராலும் குற்றம் சுமத்தப்பட்ட ஒருவராக அமைச்சர் றிசாத் பதியுதீன் இருந்துள்ளார்.எம்மை பொருத்த வரையில் அமைச்சர் றிசாத் பதியுதீன் ஒரு நிரபராதியாவார்.பொலீஸ் விசாரணையின் பின்னர் அதே போல் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் பின்னரும் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.அப்படியென்றால் அதனை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.ஒரு குறுகிய மன நிலையில் இருந்து கொண்டு அவர் அவரது மக்களுக்கு செய்யும் நல்ல திட்டங்களை மழுங்கடிக்கும் வேலையினை செய்கின்றனர்.அவர்களும் இதனை புரிந்து கொள்ள வேண்டும்.

குறிப்பாக அமைச்சர் றிசாத் பதியுதீன் பிரதி நிதித்துவப்படுத்தும் இம்மாவட்டம் அதனது முக்கிய பிரதேசமாகும்.கடந்த 30 வருட யுத்தத்தினால் இடம் பெயர்வுக்குள்ளாக்கபட்ட நீங்கள்,மீண்டும் தமது பிரதேசங்களுக்கு வாழ்வதற்கு வந்த போது இந்த இடத்தினை நீங்கள் வாழ்வதற்கு பொறுத்தமான இடமாக மாற்றித்தர அமைச்சர் றிசாத் பதியுதீன் முயற்சிகளை செய்த போது இவர் வில்பத்து காட்டினை அழிக்கின்றார் என்று  அவர் மீது தாக்குதல் தொடுத்தனர்.இவ்வாறு அமைச்சர் காட்டினை அழித்தார் என்றால் எங்கே அந்த மரங்கள் என குற்றச்சாட்டினை முன்வைப்பவர்களிடத்தில் கேட்கவிரும்புகின்றேன்.மக்களுக்கு பணி செய்து பேச்சினையும் வாங்கும் ஒருவராக அவர் இருக்கின்றார்.

சுமார் 60 வருடங்களின் பின்னர் இன்று மல்வத்து  ஓயா நீர்த்திட்டத்தினை  இந்த மன்னார் மக்களும் அனுபவிக்கும் வகையில் கொண்டுவருவதற்கு எனது காலத்தில் முடியுமாகயுள்ளது.இந்த அமைச்சினை பொறுப்பேற்றதன் பிற்பாடு இதனை நடை முறைபடுத்த தேவையான  நிதியினை பெற்றுக் கொண்டேன்.இதன் மூலம் அதிகமாக நன்மையடையக் கூடியவர்களாக மன்னார் விவசாயிகள் காணப்படுகின்றனர் என்றும் அமைச்சர் பீ.ஹரிசன் கூறினார்.

இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் அமீர்  அலி,முசலி பிரதேச சபை தவிசாளர் சுபியான்  உள்ளிட்ட. உப தலைவர ,அரசியல் பிரதி நிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இர்சாத் றஹ்மதுல்லா

No comments