பிரதேச சபை உறுப்பினர் எஸ்.ஏ.அன்வர் ஆசிரியரின் சொந்த நிதியில் வடிகான்


எம்.ரீ. ஹைதர் அலி
பிரதேச மக்களின் வேண்டுகோளின் பேரில் மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலய ஆரம்பப் பிரிவு பின் வீதிக்கு (ஹாஜியார் குறுக்கு வீதி) கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் எஸ்.ஏ.அன்வர் ஆசிரியரின் சொந்த நிதியிலிருந்து வடிகான் அமைத்துக் கொடுக்கப்பட்டுளபிரதேச சபை உறுப்பினரின் முயற்சியில் கம்பரெலிய துரித கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் புனரமைப்புச் செய்யப்பட்ட குறித்த வீதியில் வடிகானின் தேவை உணரப்படத்தையடுத்து பிரதேச மக்களின் வேண்டுகோளின் பேரில் இவ்வீதிக்கான வடிகான் பிரதேச உறுப்பினரின் சொந்த நிதியிலிருந்து உதவிக் கல்விப் பணிப்பாளர் மர்சூக், ஹபீல் மெளலவி மற்றும் பிரதேச மக்களின் ஒத்துழைப்புடன் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.இதன் மூலம் மழைக்காலங்களில் வெள்ள நீர் தேங்கி நின்று சுற்றுச்சூழல் மாசடைவது தடுக்கப்பட்டுள்ளதுடன், நீர் தேங்கி நிற்பதன் காரணமாக ஏற்படும் நோய்களிலிருந்தும் மக்கள் பாதுகாப்பு பெறும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

பிரதேச மக்களின் நன்மையைக் கருத்திற்கொண்டு குறித்த வீதியையும் சொந்த நிதியில் வீதிக்கான வடிகானையும் அமைத்துத் தந்தமைக்காக பிரதேச சபை உறுப்பினர் எஸ்.ஏ.அன்வர் ஆசிரியருக்கு பிரதேச மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.


பிரதேச சபை உறுப்பினர் எஸ்.ஏ.அன்வர் ஆசிரியர் தனது வட்டார மக்களின் நன்மைகருதி கல்வி மற்றும் வீதி அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருவதுடன், சொந்த நிதியிலிருந்தும் தன்னால் முடிந்த சேவைகளை முன்னெடுத்து வருகினறமை குறிப்பிடத்தக்கது. 

No comments