ஷரீஆ என்றால் என்ன......?


ஷரீஆ என்ற சொல்லாடல் சமூகமட்டத்தில் பல்வேறு கோணங்களில் புரியப்பட்டுள்ளது.

இன்றய காலங்களில் 'ஷரீஆ' என்ற பிரயோகம் ஒரு தெளிவை வேண்டி நிற்பது அவசியமாகும்.  அவ்வாறே இவை ஒரு ஆய்விற்கூடான புரிதலை வேண்டிநிற்கும்  விடையமாக  இருப்பதோடு, சட்டவியல் பகுதியிலும் ஆய்விற்குட்படுத்தவேண்டிய பிரயோகமாகவும் காணப்படுகிறது.

அந்தவகையில் இச்சொல்லை நோக்கினால் ; மொழிரீதியாக நோக்கும் போது 'ஷரீஆ ' எனும் சொல் 'தெளிவு ' அல்லது 'தெளிவான பாதை ' எனும் கருத்தை வழங்குகிறது அடிப்படையில் 'ஷரீஆ ' என்பது அரபு மொழிச்சொல்லாகும். பரிபாசை அல்லது நடைமுறை விளக்கத்தின்படி ஷரீஆ என்பது இஸ்லாமிய மார்க்கத்தின் சட்டதிட்டங்கள் அதாவது இறைவனால் மனிதர்களை நேர்வழிப்படுத்து வதற்காக வழங்கப்பட்ட வழிகாட்டல் என்று அறிமுகம் செய்யமுடியும்.

அல்குர்ஆனில் ஷரீஆ என்ற பிரயோகம் பயன்படுத்தப்பட்டுள்ளது 
" இதன் பின்னர் மார்க்கத்தில் (தெளிவான)  *ஒருவழியின்* மீது உம்மை நாம் ஆக்கியிருக்கிறோம் " 
 (அல்ஜாஸியா :18)
 மேலும் அல்குர்ஆனில் 'ஷரீஆ ' எனும் சொல்சார்ந்த கருத்தில் நான்கு இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது .அவை :     
(அல்மாஇதா :48) ,(அல் அஃராப் :163),(அஸ்ஸீரா :13),(அஸ்ஸீரா: 21) போன்றனவாகும். இவைதவிர ஷரீஆ எனும் சொல்லுக்கு ஒத்த கருத்தை தரும் சொற்களும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பொதுவாக அல்குர்ஆன் ஷரீஆ என்ற பிரயோகத்தை அடியானுக்கு விதியாக்கியுள்ள தொழுகை, நோன்பு, ஷகாத், ஹஜ், நற்செயல்கள் போன்றவற்றிற்கே அதிகம் பயன்படுத்தியுள்ளது. இதனடியாக நம்பிக்கைக்கோட்பாடுகள், பண்பாடுகள், சட்டங்கள்; அவற்றுள் நேரடியாக வழங்கப்பட்ட சட்டங்கள், மனித விழுமியம்சார் மனிதனால் உருவாக்கப்பட்ட சட்டங்கள் இவைற்றையும் உள்ளடக்கியிருக்கிறது.


அல்குர்ஆன் எந்தவொரு இடத்திலும் சட்டவியல் பகுதிக்கு 'ஷரீஆ' எனும் பதத்தை மாத்திரம் பயன்படுத்தவில்லை. உண்மையில் ' வாழ்வியல் நெறி ' அல்லது ' வாழ்க்கை வழிகாட்டல் ' என்பதற்கு பயன்படுத்திய பிரயோகங்களில் உள்ள பிரதான பிரயோகமாகவே 'ஷரீஆ' என்பது காணப்படுகிறது. ஷரீஆ எனும் மிகப்பெரும் பெறுமானம் சார்ந்தபகுதிகளின் ஒருபகுதியாகவே சட்டம் ( Law)  என்பது காணப்படுகிறது. சட்டங்கள் எனும்போது, வணக்கவழிபாடுகள் சார்ந்த சட்டங்கள் (இபாதத் சார்ந்தவை)  ,சமூகவியல், வியாபாரம், குற்றவியல், பொருளாதாரம் போன்ற இன்னோரன்ன பல பிரிவுகளைக்கொண்டு காணப்படுகிறது.  
 
"உங்களில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியானஷரீஆ எனும் வழிகாட்டலை நாம் வழங்கினோம் " (மாஇதா : 48)
"இந்த இடத்தில் இஸ்லாமிய சட்டம் (Islamic Law)  என்ற பிரயோக விளக்கத்தையும் புரியவேண்டிய தேவை காணப்படுகிறது. 
" இஸ்லாமிய சட்டம் " யதார்த்தரீதியாக மனித விழுமியம் சார் சட்டங்கள் அதாவது மனிதனின் பெறுமானம் ( Human values), மனித உரிமைகள் (Human rights)  பொன்ற விடயங்களை பாதுகாக்கும் அல்லது அவ்வாறான விடயங்களைத்தாங்கிய சட்டங்களாக கொள்ளப்படுகிறது.

இதன் மறுபொருள் மனிதப்பெறுமானம் மற்றும் விழுமியம்சார் விடையங்களை உள்ளடக்கிய விடையங்களையே இஸ்லாமியசட்டமாக கொள்ளமுடியுமே தவிர , விழுமியக்கோட்பாடுகளுக்கு முரனான சட்டங்களை இஸ்லாமிய சட்டமாக கொள்ளமுடியாது.
 இஸ்லாமிய சட்டங்கள் அல் குர்ஆன், அஸ்ஸின்னா ( நபியவர்களது சொல் செயல் அங்கீகாரம் ) போன்றவற்றில் கூறப்பட்ட சட்டங்கள், அதனடியாக சட்ட நிபுணர்களால் உருவாக்காப்பட்ட சட்டங்கள் போன்றவற்றை உள்ளடக்கிக்காணப்படுகிறது.
விழுமியங்களுக்கு முரனான சட்டங்கள் எனும்போது ;சர்வதிகார சட்டங்கள், மனித உரிமைகளை மீறும் சட்டங்கள் போன்றவற்றைக்குறிப்பிட முடியும். இஸ்லாமிய சட்டங்களின் விஷேட தன்மையினை நோக்கும் போது, கால இட சூழலுக்கு ஏற்ப மாற்றத்தினூடான நெகிழ்வுத்தன்மையினை கொண்டு  காணப்படுகிறது. அவ்வாறே தெய்வீகம் சார்ந்து காணப்படும் தன்மையினை இஸ்லாமிய ஷரீஆ பெறுமானங்கள் கொண்டு காணப்படுகின்றன.
 மேலும் தூய்மையானதும், இலகுவானதும், பரிபூரணமானதும்,  நடு நிலையானது மான தன்மையினை கொண்டிருப்பதுடன், நீதிமிக்கதுமாக, உறுதியான நிலைப்பாடுகளை கொண்டதுமாக, தனி மனித நலன்காக்கும் தன்மையினையும், முழுக்க மானிட நலனை அடிப்படையாகக் கொண்ட,நடைமுறைக்கேற்ற ,சர்வதேசத்தன்மைவாய்ந்த பன்புகளை கொண்டிருப்பது ஷரீஆ வின் தனித்துவமாகும்.


இவை மாத்திர மின்றி ஏனைய மதங்களில் காணப்படும் மனிதப்பெறுமானங்களை (Human Values) கொண்டதாகவும் ஷரீஆ எனும் வாழ்வுப்பாதை காணப்படுகிறது. முழுவதுமாக மதங்கள் மனிதனை மதிக்கின்றன மனித நலனை முன்னுரிமைப்படுத்துகின்றன, அவனது கண்ணியத்தைக்காக்கின்றன.   இந்த வகையிலேயே ஷரீஆ எனும் நெறிமுறை அமைந்து காணப்படுகிறது. மனிதன் இயல்பில் தவறிழைக்கக்கூடியவன்.         அவனை குறித்த தவறின் பால் மீண்டும் செல்லவிடாது ஷரீஆ அவனை பாதுகாக்கிறது. 

ஷரீஆ ஆழ்ந்து ஆரயப்பட வேண்டிய ஒரு துறையாகும். ஒரு முஸ்லிம் அல்லாத ஆட்சியாளர் மனித விழுமியங்களைப்பேனி நாட்டு நிர்வாகத்தை நடாத்துவாராயின் அதாவது சுதந்திரம், உரிமை, ஜனநாயகம் போன்ற பண்புகளைக்கொண்ட ஆட்சியை கொண்டிருந்தால் குறித்த ஆட்சியாளர் ஷரீஆவின் கொள்கைகளை அல்லது அதன் பெறுமானங்களை நடைமுறைப்படுத்தியவராவார்.

மனிதம் எங்கு மதிக்கப்படுகிறதோ அங்கு 'ஷரி ஆ 'எனும் வாழ்க்கை நெறி தளிர்க்கிறது. இஸ்லாம் எனும் சொல் தரும் கருத்துக்களான "சாந்தி " "சமாதானம் "  "அமைதி " எனும் பொருளை குறித்து நிற்கும் வாழ்க்கைத்தத்துவத்தின் சாரமே ஷரீஆவின் இலக்கு ககுகளாக காணப்படுகின்றன.

இஸ்லாமிய ஷரீஆ உலக நாகரீகங்களுக்கு வழங்கிய பங்களிப்புகள் அளப்பரியது. நிலமானியமுறை, அடிமைமுறை என்பவற்றிலிருந்து மானிட சமூகத்திற்கு விடுதலையளிக்க பெரும் பங்காற்றியமைக்கு வரலாறு சான்றாகும். இன்றும் கூட மானிட நலன்காக்கும் வகையில் மனித நலனுக்கெதிரான சிந்தனைகளுக்கெதிராகவும், பெறுமான விருத்திகளை தடைசெய்யும் கொள்கைகளுக்கெதிராகவும், செயற்படும் தன்மையுடன் காணப்படுகிறது. ஷரீவுடனான ஒரு புரிதல் மக்கள்மயப்படவேண்டியது காலத்தின் தேவையாகும்.

 *JM.JIBRAN*
 (Naleemi)
Dip. in. Psychology, 
Dip. in. HRM 
Student Counselor
Bismi Institute

No comments