பொறியியலாளர் சிப்லி பாரூக்கின் அழைப்பின் பேரில் இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் காத்தான்குடிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.


ஏ.எல்.டீன் பைரூஸ்

கௌரவ அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் ஆகியோர்களிடம்  மேற்கொண்ட கலந்துரையாடலின் பயனாக குறிப்பாக மஞ்சந்தொடுவாய் ஆயுள்வேத யூனானி ஆராய்ச்சி வைத்தியசாலை அபிவிருத்தி பணிகள் தொடர்பில் கலந்துரையாட எதிர்வரும் 
(30/08/ 2019 வெள்ளிக்கிழமை) இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் அவர்கள் காத்தான்குடிக்கு விஜயம் ஒன்றினை மேற் கொள்ளயிருப்பதாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாரூக் தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்.,,,,,,,,,

கெளரவ அமைச்சர்களுடன்  பேசியதன் பயனாக  660 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு  நிதிகள் 3 ஆண்டு திட்டத்தினுள் குறிப்பாக   (2020, 2021, 2022) ஆண்டினில் செலவு செய்யப்பட்டு பூரணமாக முடிவுறுத்துவது என்கின்ற தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

அந்த வகையில் நான் அமைச்சரிடம் கேட்டுக் கொண்டதற்கு அமைய எதிர்வரும் (30) வெள்ளிக்கிழமை இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் அவர்கள் காத்தான்குடி யூனானி ஆராய்ச்சி வைத்தியசாலைக்கு விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளார்.

மேலும் அபிவிருத்தி விடயங்களை இராஜாங்க அமைச்சர் நேரடியாக  பார்வையிட இருப்பதுடன்,  புதிய கட்டுமான பணிக்காக ஒதுக்கப்பட்டுள்ள முதியோர் இல்ல காணியில் ஒரு பகுதியை இதற்காக நாங்கள் பெற்று அதனை சுகாதார அமைச்சுக்கு ஒப்படைத்து இருக்கின்றோம் என்றும் தெரிவித்தார்.

இந்த வேலைத் திட்டங்கள் யாவும் மிக அவசரமாக மேற்கொள்ளப்படல் வேண்டும் என்பதுடன்  யூனானி வைத்தியத் துறையில் மக்கள்    அதிகமாக பிரயோசனங்களை 
அடைந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும் இது  தொடர்பில் கலந்துரையாடுவதற்காக  எமது அழைப்பின் பேரினில்  இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் அவர்கள் காத்தான்குடி விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என்றும்  முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாரூக் தெரிவித்தார்.

No comments