காத்தான்குடி நகர முதல்வருக்கு எனது வாழ்த்துக்கள் பொறியியலாளர் சிப்லி பாறூக்2012 காலப்பகுதியில் காத்தான்குடிக்கான ஓர் நவீன மடுவம் அமைக்கப்பட வேண்டும் என்று அப்போதைய நகர சபை தவிசாளர் சகோ. SHM அஸ்பர் அவர்களால் ஊரில் உள்ள துறைசார்ந்தவர்கள், வைத்தியர்கள், பொறியியலாலர்கள் என பலரும் அழைக்கப்பட்டு ஆலோசனைக்கூட்டம் ஒன்று நடாத்தப்பட்டது அக்காலகட்டத்தில் நான் எவ்வித அரசியல் செயற்பாடுகளிலும் ஈடுபட்டிருக்கவில்லை. 

அக்கூட்டத்தில் நல்லாட்சிக்கான மக்கள் முன்னனி நகர சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டு அஙர்களினுடைய முன்மொழிவு ஒன்றையும் சமர்ப்பித்திருந்தார்கள் அதே போண்று நகர சபையும் ஓர் முன்மொழிவை சமர்ப்பித்திருந்தது இவ்விரண்டையும் ஆராய்ந்து ஓர் புதிய திட்டத்தை எமது குழு தயாரித்தது. 

இதனடிப்படையில் நவீன முறையில் கட்டப்பட்ட மடுவம் 80% வேலைகள் முடிவுற்ற நிலையில் அண்மையில் பெருநாள், அதனையடுத்த உழ்ஹிய்யா தேவைகளை நிவர்த்திசெய்வதற்காக 
தவிசாளர் அஸ்பர் அவர்களின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து பெருநாள் மறுதினம் நானும் பள்ளிவாயலுக்குரிய உழ்ஹிய்யா இறைச்சியை பெறுவதற்காக மடுவத்தில் காலை 5.30 தொடக்கம் நின்றுகொண்டுருந்தேன். இங்கே இரவு தொடக்கம் தவிசாளர் சகோ. அஸ்பர் அவர்களும் நின்று கொண்டு அங்கு நடைபெறும் பணிகளை அவதானித்துக்கொண்டிருந்தார். இரத்தம் வழிந்தோடும் கான் பகுதிக்குமேலால் வைத்து தோல் உரிக்கும் வேலைகள் செய்யக்கூடாது என்று அறிவுறுத்தல் விடப்பட்டிருந்தது காரணம் கானில் உள்ள இரத்த நீரை கழிவுத்தொட்டிக்குள் தள்ளும்  மோட்டார் பம்பிக்குள் ஏதும் கடினமான பொருட்கள் சென்றால் அது பழுதடைந்துவிடும் இருந்தும் ஒருவர் அதன்மேல்வைத்து இறைச்சியை வேறாக்கினார். 

இதனை அவதானித்த தவிசாளர் அவரை காரமாக கண்டித்ததுடன் அந்த மடுவம் எவ்வளவு கஷ்டங்களுக்கு மத்தியில் கட்டப்பட்டது என்பதையும் இதை நீண்டகாலம் பாவிக்கவேண்டும் என்பதை அவ்விடத்தில் வேலைசெய்தவர்களிடம் கூறிவைத்தார்.

உண்மையில் இப்படியாக நகரசபையின் சொத்துக்கள் வீனடிக்கப்பட்டு மக்களுக்கு நீண்டகாலம் சேவைசெய்யக்கூடிய சேவைகள் குறுகிய காலத்திற்குள் செயலிழந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் அன்று முழுநாளும் தான் கழத்தில் நின்று இவ்வேலைகளை ஒழுங்குபடுத்திய தவிசாளர் சகோதரர் அஸ்பர் அவர்களுக்கு அரசியலுக்கப்பால் எனது வாழ்த்துக்கள்

No comments