காத்தான்குடி தொடர்பில் தவறான புரிதல் அரேபியாவை நோக்கி எம்மை தள்ள வேண்டாம்எம்.ஐ.அப்துல் நஸார்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவு சம்பந்தமாக நாடு முழுவதும் பேசப்பட்டது. இந்தத் தாக்குதலுக்கு முன்னதாக நாம் காத்தான்குடி பற்றிப் பேசியது 1990 இலாகும். அந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதம் 03 ஆந் திகதி சமய வழிபாட்டுத் தலங்களில் வணக்கத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நூற்றுக்கணக்கானோர் எல்.ரீ.ரீ.ஈ அமைப்பினால் மனிதாபிமானமற்ற முறையில் படுகொலை செய்யப்பட்டனர். 

எவ்வாறெனினும் காத்தான்குடி என்றாலே தென் பகுதி மக்களின் மனதில் தோன்றுவது சின்ன அரபு தேசம் என்ற எண்ணமாகும். பேரீச்சை மரங்கள் நிறைந்திருக்கும் சுற்றுச்சூழல்இ தலைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிளில் செல்லும் இளைஞர்கள்இ புர்கா அணிந்து செல்லும் பெண்கள் இவ்வாறு இருக்கும் காத்தான்குடியில் இல்லாலிருக்கும் ஒன்றுதான் ஒட்டகமாகும் என கடந்த காலங்களில் பல்வேறு நபர்களால் மட்டுமன்றி சில ஊடகங்கள் மூலமாகவும் அறிய முடிந்தது. இரவு 10.00 மணியளவில் நாம் மட்டக்களப்பு நகரினுள் நுழையும்போது அங்கு பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. எனினும் அங்கிருந்து சுமார் ஐந்து கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள காத்தான்குடி அனைத்து மின் விளக்குகளும் ஒளிர்ந்துகொண்டிருக்க பகல் போல் காணப்பட்டது. இரண்டு அல்லது மூன்று கிலோமீற்றர் அளவே காணப்படும் வர்த்தக நகரான காத்தான்குடியின் பிரதான பாதை நடுவில் பிரிக்கப்பட்டு அதில் பேரீச்சை மரங்கள் நடப்பட்டுள்ளன. உயர்ந்து வளர்ந்திருந்த பேரீத்தம் மரங்களுள் பல காய்த்திருந்தன. அந்த நகரின் கட்டமைப்பை நோக்கும்போது அரேபியக் கலாச்சாரத் தாக்கங்கள் அவற்றில் பொதிந்திந்தன. எவ்வாறெனினும் காத்தான்குடியை ஒருபோதும் பார்த்திராதவர் தெற்கிலிருந்து காத்தான்குடி தொடர்பில் அச்கசமூட்டுவதற்காக எச்சரிக்கும் அளவிற்கு பயங்கர நிலைமை அங்கு இல்லை என்பதை குறிப்பிட்டாக வேண்டும்.    


புர்கா சட்டத்திற்கு மதிப்பளித்தல்.......... 

காத்தான்குடி பிரதேசவாசிகளில் 75 வீதமானோர் வியாபாரிகளாவர். மொத்த மற்றும் சில்லறை வியாபாரம் இங்கு மேற்கொள்ளப்படுவதோடு வெளிப் பிரதேசங்களிலிருந்தும் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக பெருந்தொகையானோர் நாளாந்தம் காத்தான்குடிக்கு வந்து செல்கின்றனர். தையல் ஊசி தொடக்கம் மனிதப் பயன்பாட்டுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் இந்த நகரத்தில் கொள்வனவு செய்து கொள்ள முடியும். முஸ்லிம்கள் வியபாரம் செய்வதற்கு பிறப்பிலேயே ஆற்றல் கொண்டவர்கள் என்பது மென்மேலும் நிரூபணமாவது காத்தான்குடியிலாகும். வருபவர்களை அன்புடன் வரவேற்க வேண்டும் என புதிதாக அவர்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை. கொழும்பில் கிடைப்பதை விட குறைந்த விலையில் இங்கு பொருட்களைக் கொள்வனவு செய்ய முடியும்இ இதற்குக் காரணம் போட்டித்தன்மையுடனான விலையில் அவர்கள் தத்தமது வியாபாரத்தை செய்வதனாலாகும். விசேடமாக இங்கு குறிப்பிட வேண்டியது என்னவென்றால் புர்காவுக்கு தடைவிதிக்க அரசாங்கம் எடுத்த நடவடிக்கை மீறப்படுவதை எங்கும் காண முடியவில்லை காத்தான்குயிலுள்ள அனைவரும் தமது முகங்களைத் திறந்திருக்கத்தக்கதாக தலைகளை மாத்திரம் மூடியவாறு பிரதான இடங்களில் நடமாடியதைக் காணக்கூடியதாக இருந்தது. 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் நாட்டில் ஏற்பட்ட நிலைமையினைக் கருத்திற்கொண்டு முஸ்லிம் மக்கள் தாம் இது வரை காலமும் பின்பற்றி வந்த சில அரேபியப் பண்பாட்டோடிணைந்த பல விடயங்களை கைவிட்டிருப்பதைக் காண முடிவதோடு இது தேசிய மற்றும் சமய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு மிகவும் உதவியாக அமைந்துள்ளது. 

காத்தான்குடி பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் அனைவரும் தலைக்கவசம் அணிந்தவாறே பயணித்ததைத் தெளிவாகக் காண முடிந்தது. உள் வீதிகளில் பயணிக்கும் மிகச் சொற்பமானோர் இச் சட்டத்தை மதிக்காது சென்றதையும் காணக்கூடியதாக இருந்தது. இதனை மிகப் பெரிய விடயமாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லைஇ ஏனென்றால் தென்பகுதியில் இவ்வாறு இடம்பெறுவதைக் காண முடியும். முப்பது ஆண்டு காலமாக வடக்குக் கிழக்கில் இடம்பெற்ற யுத்தத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய அழிவுகளைச் சந்தித்தது. ஆயிரக்கணக்கான உயிர்களும் கோடிக்கணக்கான பொருளாதாரமும் இதனுள் அடங்கும். எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதம் நிலவிய காலத்தில் மோட்டார் சைக்கிள்களில் வந்து துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுவிட்டு தப்பிச் செல்லும் சம்பவங்கள் பரவலாக இடம்பெற்றன. இக் கொலைகாரர்கள் தலைக்கவசம் அணிந்துகொண்டு வந்ததனால் அவர்களை அடையாளம் காண்பதற்கான இடையூறை நீக்கும் பொருட்டு அக் காலத்தில் தலைக்கவசம் அணிவது மட்டக்களப்பில் தடைசெய்யப்பட்டிருந்தது. அந்த பழக்கத்துடன் வளர்ந்தவர்கள் யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் மீண்டும் மட்டக்களப்பில் தலைக்கவசம் அணியும் சட்டம் அமுல்படுத்தப்பட்டபோதிலும் அதனை பின்பற்றாத நிலை முன்னர் காணப்பட்டது எனினும் அவை அனைத்தும் தற்போது மாற்றமடைந்துள்ளது. 

அதிக சனத்தொகை............

காத்தான்குடி என்பது நூற்றுக்கு நூறு வீதம் முஸ்லிம் மக்கள் வாழும் பிரதேசமாகும். 18 கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்ட காத்தான்குடியின் நிலப்பரப்பு 6.5 சதுர கிலோமீற்றர்களாகும். 2018 ஆம் ஆண்டு இப் பிரதேசத்தில் 48இ093 இருப்பது பதிவாகி இருந்தது. இதில் ஆண்கள் 23இ753 பேரும் பெண்கள் 24இ340 பேரும் உள்ளடங்கியிருந்தனர். அதற்கமைவாக இப் பிரதேசத்தில் ஒரு சதுர கிலோமீற்றரில் வசிப்போரின் எண்ணிக்கை 7இ000 இற்கும் அதிகமாகும். இலங்கையில் ஒரு சதுர கிலோமீற்றரினுள் வசிக்கும் அதிகூடிய எண்ணிக்கை இதுவாகும். சனத்தொகை அடர்த்தியினைப் பொறுத்தவரை அடுத்த நிலையில் இருப்பது தெஹிவல பிரதேசம் எனவும் அந்தத் தொகை மூவாயிரம் எனவும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் மொஹமட் ஷெரீப் மொஹமட் ஜாபிர் குறிப்பிட்டார். சாதாரணமாக ஒரு சதுர கிலோமீற்றரினுள் வசிக்கவேண்டிய மக்களின் எண்ணிக்கை சுமார் 1இ500 எனவும் காத்தான்குடியில் அந்த எண்ணிக்கை நான்கு ஐந்து மடங்கு அதிகமாகக் காணப்படுவதாகவும் ஜாபிர் தெரிவித்தார். 

கட்டுப்பாடின்றி முஸ்லிம் மக்கள் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்வதற்குக் காரணம் அது இறைவனால் தமக்கு வழங்கப்படும் வழங்கப்படும் பரிசு என கருதுவதற்குப் பழக்கப்பட்டுள்ளமையாகும். குடும்பக் கட்டுப்பாட்டின் மூலம் குழந்தைப் பேறை மட்டுப்படுத்துவது இறைவனுக்கு எதிரான செயல் என அவர்கள் கருதுகின்றனர். கடந்த ஆண்டு காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் 450 மகப்பேறுகள் இடம்பெற்றுள்ளன. இவர்களுள் ஐந்து தாய்மாரின் வயது 13 ஐ விடவும் குறைவானதாகும். இந்த வருடம் இது வரை 122 மகப்பேறுகள் இடம்பெற்றுள்ளன. வைத்தியசாலையின் பணித்தொகுதியினரில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்களாவர். தமிழர்களும் சிங்களவர்களும் இதனுள் காணப்படுகின்றனர். தாதியர்களுள் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் என்பதோடு அவர்களின் எண்ணிக்கை 30 ஆகும். முஸ்லிம்கள் ஏழு பேரும் சிங்களவர்கள் ஆறு பேரும் தாதியர் பணித் தொகுதியினுள் இருக்கின்றனர். அவர்கள் அனைவரினதும் அர்ப்பணிப்புடன் காத்தான்குடி வைத்தியசாலையின் வினைத்திறன் கிழக்கு மாகாணத்தில் முதன்மை நிலையில் காணப்படுகின்றது. காத்தான்குடியின் அரசியல் பலம் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வின் கைகளிலேயே உள்ளது. நகர சபை உறுப்பினர்களின் அமைவைப் பார்த்தால் இதனைப் புரிந்துகொள்ள முடியும். கடந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் பத்து வட்டாரங்களிலும் வெற்றி பெற்றது சிறிலங்கா சுதந்திரக் கட்சியாகும். கைச் சின்னத்தில் போட்டியிட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஹஸ்புல்லாஹ்வின் ஆதரவு கிடைத்ததால் இந்த வெற்றி அக்கட்சிக்குக் கிடைத்தது. போனஸ் ஆசனங்களில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு மூன்று ஆசனங்களும் சுயேற்சைக் குழுவிற்கு ஐந்து ஆசனங்களும் ரிஷhட் பதியுத்தீனின் கட்சிக்கு ஒரு ஆசனமும் கிடைத்தன. ஐக்கிய தேசியக் கட்சி காத்தான்குடி நகர சபைக்கு சமர்ப்பித்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. 

காத்தான்குடியில் முஸ்லிம் வியாபாரிகள் சுமார் 1இ500 பேர் இருப்பதாகவும் காத்தான்குடியை சேர்ந்த வியாபாரிகள் வெளியூர்களில் சுமார் 2இ000 பேர் இருப்பதாகவும் காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தெரிவித்தார். நகர சபைக்கு வருடாந்தம் கிடக்கும் வரி வருமானம் 600 இலட்சம் எனவும் அவர் தெரிவித்தார். 

பேரீத்தம்பழச் செய்கை..........

நகரில் பேரீத்தமர நடுகைத் திட்டத்தின் ஆரம்பகர்த்தா இவராவார். அவை நடப்பட்டது 2008 ஆம் ஆண்டிலாகும். தென்னிலங்கையில் சிலர் இப் பேரீத்த மரங்கள் தொடர்பில் கேள்வி எழுப்புவதற்குக் காரணம் அவை அரபிய பண்பாட்டோடு தொடர்புபட்ட மரம் என்பதனாலாகும். இது சம்பந்தமாக நகர சபையின் தவிசாளர் பின்வருமாறு கூறுகின்றார். 

பேரீத்த மரங்கள் அரபு நாடுகளில் வளர்ந்தாலும் அவை எமது இஸ்லாம் சமயத்தோடு சம்பந்தப்பட்ட மரமல்ல. பௌத்தர்கள் அரச மரத்தினை தமது சமயத்தோடு சம்பந்தப்பட்ட மரமாகக் கருதுகின்றனர். ஆரம்பத்தில் பாம் மரங்களை நடுவதற்கு எண்ணியிருந்தபோதும் அது கைவிடப்பட்டதற்குக் காரணம் அவை பெரிதாக வளர்வதனாலாகும். பனை மரங்களை நட்டால் பிரதான வீதியின் போக்குவரத்துக்கூட தடங்கல் ஏற்படும் ஆபத்திருப்பதாக நிபுணர்கள் தெரிவித்தனர்இ இந்த பேரீத்த மரங்களை நாம் அரபு நாடுகளிலிருந்து கொண்டு வரவில்லைஇ இந்த நாட்டின் அம்பாறைஇ முல்லத்தீவுஇ பண்டாரவளைஇ கிளிநொச்சிஇ பதுளைஇ மஹஓயா மற்றும் மன்னார் போன்ற பிரதேசங்களிலிருந்து கொண்டுவரப்பட்டவையாகும். இந்த மரம் அதிக வெப்பநிலைக்கு ஈடுகொடுக்கக்கூடியதாகும். இதற்கு சிறிதளவு நீர் போதமானதாகும்இ இவ்வாறான வசதிகள் காரணமாகவே பேரீத்த மரங்கள் நடப்பட்டன. மட்டக்களப்பு மாவட்டம் அதிக வெப்பநிலை கொண்ட பிரதேசம் என்பதால் அதற்கு ஏற்ற மரங்களை நடுகை செய்ய வேண்டும். இவற்றிற்கு வேறு அர்த்தம் கற்பித்து இனஇ மத பேதங்களை உருவாக்குவது இந் நாட்டின் ஊடகங்களாகும்.  

காத்தான்குடியினுள் நுழையும் இடம் தொடக்கம் பொரும்பாலான இடங்களில் அரபு எழுத்துக்களைக் காணக்கூடியதாக இருந்தது. பேரீத்த மரங்களுடன் அரபு எழுத்துக்களும் இணைந்திருப்பதனால் காத்தான்குடி சிறிய அரபு தேசம் என எழும் குற்றச்சாட்டிற்கு பதிலளித்த நகர முதல்வர் எஸ்.எம்.அஸ்பர்இ முஸ்லிம்கள் சிலைகளை வணங்குவதில்லை என்பதால் அல்குர்ஆனில் உள்ள பகுதிகளை எடுத்து குர்ஆனில் கூறப்பட்டுள்ள மொழியிலேயே சிற்சில இடங்களில் காட்சிப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார். பெரும்பாலானவை முக்கியமான கூற்றுக்கள் எனவும் காத்தான்குடியின் நுழைவாயிலில் வெல்கம் என்ற ஆங்கிலக் கருத்து வரும் வகையில் சிங்களம்இ தமிழ் மற்றும் அரபு மொழிகளில் வாசகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

சமயம் சம்பந்தப்பட்ட குறியீடுகள் மற்றும் சிலைகள் நாட்டின் வேறு பிரதேசங்களில் நகர நுழைவாயில்களில் காணப்பட்டபோதிலும் காத்தான்குடி தொடர்பில் மாத்திரமே ஊடகங்கள் கேள்வி எழுப்புகின்றன எனவும் அவர் nதிவித்தார். 

நாம் காத்தான்குடியினுள் நுழைந்தபோது அவர் தனியார் ஊடகங்கள் இரண்டின் பெயரைக் குறிப்பிட்டு நீங்கள் அந்த ஊடகங்களைச் சேர்ந்தவர்களா என எம்மிடம் வினவினார். ஏன் இவ்வாறு கேடகிறீர்கள் என நாம் வினவியபோது முழு முஸ்லிம் சமூகத்தையும் இலக்குவைத்து அவர்களுக்கு எதிராக சிங்கள மக்களைத் தூண்டிவிடும் செயற்பாடுகளில் அவை ஈடுபடுவதாகத் தெரிவித்தார். அந்த ஊடகங்கள் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக செயற்படுகின்றன என்பது அவரது கருத்தாகும். 


கால்வைக்காது அவர்கள் செய்யும் காரியம் கண்பார்வையற்ற ஒருவன் யானையினைப் பற்றி வருணிப்பதுபோன்று தாம் நினைப்பதையெல்லாம் வெளயிடுகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார். 

எல்.ரீ.ரீ.ஈ அமைப்பின் பயங்கரவாத காலத்தில் அவர்களது செயற்பாடு சம்பந்தமாக ஒட்டுமொத்த தமிழ் மக்கள் மீதும் குற்றம் சுமத்தவில்லை எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் ஆயுதக் குழுவின் செயற்பாட்டின்போது ஒட்டுமொத்த சிங்கள மக்கள் மீதும் குற்றம் சுமத்தவில்லை எனவும் தெரிவித்த காத்தான்குடி நகர சபையின் தலைவர்இ சஹரானின் செயற்பாட்டின் பின்னர் ஒட்டுமொத்த முஸ்லிம் மக்கள் மீதும் குற்றம் சுமத்தப்படுவது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார். சஹரானின் சமய செயற்பாடுகள் சம்பிரதாய முஸ்லிம் மக்களின் செயற்பாடுகளுடன் முரண்பட்டமையினை 2014 ஆம் ஆண்டு ஆரம்பத்திலிருந்து காத்தான்குடி மக்கள் அறிந்து வைத்திருந்தனர் எனவும் அது சம்பந்தமாக புலனாய்வுப் பிரிவினருக்கும் தனது தலையீட்டுடன் தகவல் வழங்கப்பட்டதாகவும் நகர சபையின் தலைவர் தெரிவித்தார். 

தவறான புரிதல் ...........

அதிகாரிகள் உரிய முறையில் செயற்பாடுகளை மேற்கொள்ளாதிருந்துவிட்டு இடம்பெற்ற பேரழிவின் பழியை முழுமையாக முஸ்லிம் சமூகத்தின் மீது போடுவது அநீதியாகும் எனத் தெரிவித்த அவர் சம்பவம் நடைபெற்று 72 மணித்தியாலங்களுக்குள் சஹரான் மற்றும் தொடர்புகளைப் பேணிய அனைவரையும் பாதுகாப்புத் தரப்பினரால் கைது செய்ய முடியுமாக இருந்ததற்குக் காரணம் அடிப்படை வாதத்திற்கு எதிரான முஸ்லிம் மக்கள் வழங்கிய தகவல்களாகும் எனவும் அவர் தெரிவித்தார். 

முஸ்லிம்களுக்குத் தேவை இந்த நாட்டில் ஒற்றுமையுடனும் சமாதானத்துடனும் வாழ்வதாகும். முப்பது ஆண்டுகால யுத்தத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்டவர்கள் கிழக்கு மாகாண முஸ்லிம்களாவர். அது முடிவடைந்த பின்னர் நாம் கவனம் செலுத்தியது இந்த நாட்டை எவ்வாறு முன்கொண்டு செல்வது என்பது பற்றியாகும். சுற்றுலாப் பயணிகளின் வருகை படிப்படியாக அதிகரித்துச் சென்ற அதேவேளை உலகம் எம்மை நல்லெண்ணத்துடன் பார்த்தது. அவை அனைத்தும் சிறிய அடிப்படைவாதக் குழுவினால் அழிக்கப்பட்டுவிட்டது. நாம் இலங்கையர்கள். எம்மை அரேபியாவை நோக்கி தள்ளிவிட முயற்சிக்க வேண்டாம். 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சில தினங்களுக்குள் சம்பவத்தோடு சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்பட்டது எமது ஒத்தாசையின் காரணமாகவேயாகும். பயங்கரவாதிகளின் உடலை முஸ்லிம் மையவாடிகளில் அடக்கம் செய்வதற்குக் கூட முஸ்லிம் மக்கள் அனுமதிக்கவில்லை. இனவாதத்தைத் தூண்டும் சில ஊடகங்கள் இவற்றை நாட்டுக்கு கூறாதது பெரும் துரதிஷ்டமாகும் எனவும் அவர் தெரிவித்தார். 

நன்றி : தினமின 
No comments