இனங்களுக்கு மத்தியில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த இத்தியாகத்திருநாளை பயன்படுத்திக் கொள்ளவோம் என பெருநாள் வாழ்த்துச்செய்தியில் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.


(ஊடகப்பிரிவு) 
புனித "ஈதுல் அழ்ஹா" ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் விடுத்துள்ள பெருநாள் வாழ்த்துச் செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறுபட்ட சோதனையான காலகட்டத்திலே நாட்டில் நடைபெற்ற குண்டுவெடிப்புக்கள் அசம்பாவித சம்பவங்களுக்கு மத்தியில் பல ஆயிரம் உறவுகள் இன்னும் சிறைகளிலே வாடுகின்ற இந்த சூழ்நிலையிலும் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்திலிருந்து இலட்சக்கணக்கான மக்கள் இன்னும் மீளமுடியாத காலகட்டத்திலும் பல நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்து இன்னும் வைத்தியசாலைகள் மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொண்டு வரும் நிலையிலும் இப்புனிதமான ஹஜ் பெருநாளைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். 
எனவே இந்த நிலையில் நாம் அவர்களுக்காக பிரார்த்திக்கவேண்டும் எங்களால் முடிந்த அளவு உதவிகளை அவர்களுக்காக செய்யவேண்டும் குறிப்பாக இனங்களுக்கு மத்தியில் புரிந்துனர்வு ஏற்படும் வகையில் நாங்கள் செயற்படவேண்டும் நாம் வாழும் பிரதேசங்களில் இருக்கின்ற  பெரும்பான்மை மக்களோடு நல்ல உறவை ஏற்படுத்துவதற்கு இந்தப் பெருநாளை நாங்கள் பயன்படுத்தவேண்டும் குறிப்பாக இலங்கை முஸ்லிம்கள் மிக நிம்மதியான, மிகச் சிறப்பான எதிர் காலத்திலே வாழ்வதற்கான சூழ் நிலைகளை எல்லாம் வல்ல இறைவன் உருவாக்க வேண்டுமென்றும் அதற்காக நாங்கள் அல்லாஹ்விடத்தில் எல்லோரும் பிரார்த்திக்கவேண்டும்.
எனவே இத்தியாகத் திருநாளை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கொண்டாடும் உங்கள் எல்லோருக்கும் புனித "ஈதுல் அழ்ஹா" ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தனது பெருநாள் வாழ்த்துச்செய்தில் தெரிவித்துள்ளார்.

No comments