ஒரு கோடி அபிவிருத்தி வேலைகள் மக்கள் பாவனைக்காக கையளிப்பு பிரதம அதிதியாக ஹிஸ்புல்லா பங்கேற்புஒரு கோடி அபிவிருத்தி வேலைகள் மக்கள் பாவனைக்காக கையளிப்பு
அரசாங்கத்தின் கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் காத்தான்குடி செயலகப்பிரிவில் பல்வேறு வேலைத்திட்டங்கள் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவில் அரசாங்கத்தின் கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 


இதற்கமைவாக சுமார் ஒருகோடி செலவில் காத்தான்குடி அன்வர் வட்டாரத்தில் நிறைவுபெற்ற மற்றும் மேற்கொள்ளப்படவுள்ள பதினெட்டு அபிவிருத்தித்திட்டங்களுக்கான வேலைத்திட்டங்கள் அன்வர் வட்டார நகர சபை உறுப்பினர் ஏ.எம்.பௌமி தலைமையில்  (02.08.2019 வெள்ளி) மாலை ஆரம்பித்தும் திறந்தும் வைக்கப்பட்டது.மேற்படி நிகழ்வில் கிழக்கு மாகான முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக பங்கேற்று சிறப்பித்தார். வைபவத்தில் காத்தான்குடி நகரசபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் உள்ளிட்ட நகர சபை உறுப்பினர்கள் முக்கியஸ்தர்கள் என பலரும் பங்கேற்றனர்.இத்திட்டத்தின் கீழ் பதினாறு பிரதான மற்றும் உள்ளக கொங்ரீட் வீதிகள் பொது மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டதுடன் அன்வர் முன்பள்ளி மைதானத்திற்கான புனரமைப்பு பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டதுடன் அன்வர் பாடசாலை மைதானம் புனரமைக்கப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டுக்காக திறந்தும் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments