ஆகஸ்ட் 3 காத்தான்டி பள்ளிவாயல் படுகொலை நாள்......... எங்கள் உறவுகள் இறைவனுடன் உறவாடிக்கொண்டிருக்கும்போது கோளைத்தனமாக முதுகில் சுட்டதை எங்களால் மறக்க முடியவில்லைதமிழ் சமூகத்தை பெரும்பாண்மை சமூகத்தின் அடக்குமுறைகளுக்குள் கொண்டுவர எத்தனித்த ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் தமிழ் அரசியல்வாதிகளின் அரசியல்ரீதியான முன்னெடுப்புக்கள் அவ்வப்போது தமிழ் மக்களை பாரிய அழிவுகளில் இருந்து தடுத்தாலும் தடுக்கமுடியாத தமிழ்மக்களுக்கெதிரான மிகப்பெரிய அழிவாக 1983 ஜூலைக்கலவரம் அமைந்தது. சர்வதேசமும் நாட்னிற்குள் வாழ்ந்த அதிகமான பெரும்பாண்மை சமூகத்தவர்களும் சக சிறுபான்மையான முஸ்லிம்களும் இந்த வன்முறையை எதிர்த்தது மாத்திரமல்லாது தமிழ் மக்களுக்கான தமது ஆதரவை தெரிவித்தார்கள். இதன் உச்சகட்டமாக புலிகளின் போராட்டத்தில் முஸ்லிம் இளைஞர்கள் மாத்திரமல்ல புர்காவை அணிந்துகொள்ள வேண்டும் என்றளவிற்கு சிந்திக்கும் முஸ்லிம் யுவதிகள்கூட புலிகளுடன் இணைந்து ஆயுதம் ஏந்தி அரசபடைக்கெதிராக போராடினார்கள். 

பல நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் போராட்ட கழத்தில் கொல்லவும் பட்டார்கள் இலங்கை வரலாற்றில் இந்த நாட்டு அரசுக்கெதிராக முஸ்லிம்கள் ஒருபோதும் விஷ்வாசமில்லாமலோ அல்லது அரசிற்கு எதிரான சக்திகளோடு இணைந்தோ ஒருபோதும் செயற்பட்டது கிடையாது ஆனால் முதன்முதல் அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப்போராடியது தமது சக சிறுபான்மையினுடைய விடுதலைக்காக அன்றியே தவிர தமது இனத்திற்காக அல்ல. 

இப்படியாக முஸ்லிம்கள் தமிழ் மக்களுடன் இணைந்து வாழ்ந்து வந்தார்கள் 1990 இற்கு முற்பட்ட காலப்பகுதியில் புலிகளுக்கு தமது வீடுகளிலும் தமது வியாபாரஷ்தலங்களிலும் தஞ்சம் கொடுத்தார்கள் இப்படியான ஒரு சமூகத்தினை நோக்கி புலிகளின் துப்பாக்கி திரும்பியது தமக்கு எதிரானவர்கள் என்று கருதுபவர்களை கழைபிடுங்குகிறோம் என்ற தலைப்ப்புடன் முஸ்லிம் சமுகத்திற்கேதிராக ஆரம்பித்த கொலைகள் நாளடைவில் முஸ்லிம்களை கொத்துக்கொத்தாக அழித்து இனச்சுத்திகரிப்பு செய்யும் அளவிற்கு வளர்ந்தது.

முஸ்லிம்களின் பொருளாதாரம் அத்துமீறி கொள்ளையடிக்கப்பட்டு வட, கிழக்கு முஸ்லிம்கள் நசுக்கப்பட்டார்கள், அவர்களது பூர்வீக இருப்பிடங்களில் இருந்து பிரதேசங்கள் பிரதேசங்களாக துரத்தியடிக்கப்பட்டார்கள் ஆற்றுக்கு, கடலுக்கு மீன்பிடிக்கச் செல்பவர்கள் செத்தமீன்களுடன் உயிரற்ற உடல்களாக கரைக்கு திருப்பப்பட்டார்கள் அன்றாட வயிற்றுப்பசியை போக்குவதற்காக தமிழ் பிரதேசங்களுக்குள் சைக்கிளிலும் தலையில் தமது வியாபாரப் பொருட்களை சுமந்தவர்களாக சென்ற எத்தனையோ ஏழை அங்காடி வியாபாரிகளை வீதி ஓரங்களில் சுடப்பட்டு அந்த சடலங்களையாவது எடுத்துக்கொள்ள முடியாது காகங்கள் கொத்தித்திண்டதுபோக மீதியை நாங்கள் அடக்கியிருக்கிறோம், புகையிரதத்திலும், பேரூந்தகளிலும், கார்களிலும், வேன் களிலும் மோட்டார் வண்டிகளிலும் புலிகள் சுட்டுக்கொன்ற முஸ்லிம்களின் எண்ணிக்கை இன்றுவரை எண்ணிமுடிக்கப்படவில்லை, இதை எல்லாம் தாண்டி குருக்கள் மடத்தில் ஒரேநாளில் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் கடத்திக்கொல்லப்பட்டார்கள் இன்றுவரை அவர்களது புதைகுழிகளை தோண்டுவதற்காக நாங்கள் போராடிக்கொண்டிருக்கிறோம். 

நீங்கள் செய்த அத்தனை பொலைச்சம்பவங்களும் நடைபெறலாம் என நாங்கள் எதிர்பார்த்தோம் அதர்க்காக இறைவனிடத்தில் பிராத்தித்து இராணுவத்தின் பாதுகாப்பையும் கேட்டோம் இரவில் விளிப்புக்குழுக்கள் என்று பல இளைஞர்கள் எமது மக்கள் தூங்கும்போது அவர்களை வீடுபூந்து நீங்கள் தாக்குவீர்கள் என்று விழித்திருந்தோம் இவ்வளவு கொலைகள் எமக்கு உங்களால் அரங்கேற்றப்பட்டும் நாங்கள் உங்கள்மீது கொண்டிருந்த நம்பிக்கை நீங்கள் கோழைத்தனமாக முதுகுக்புப்பின்னால் நின்று எமது உடன் பிறப்புக்கள் தமது முகத்தை பூமியில் குத்தி இறைவனுக்கு மிக சமீபமாக இருக்கும்போது மிலேச்சத்தனமாக நீங்கள் சுடுவீகள் கைக்குண்டெறிவீர்கள் என்று நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை உங்களின்மீதிருந்த பள்ளியில் சுடமாட்டீர்கள் என்ற உயர்ந்த நம்பிக்கையால் எங்களது அன்றாடப்பிராத்தனைகளில்கூட எல்லாவகையிலும் காப்பாற்று ஆண்டவனே என்று துஆ செய்த நாங்கள் பள்ளியில் நாங்கள் உன்னைத்தொழும்போது புலிகளால் தாக்கவைத்துவிடாதே என்று கேட்க மறந்துவிட்டோம். 

இந்த நாட்டில் முதன்முதல் வணக்கஷ்தலங்களில் வழிபாட்டில் ஈடுபடுபவர்களை கோழைத்தனமாக கொல்லும் கலாச்சாரத்தை அரங்கேற்றி இப்படியும் அனியாயமாக கொல்ல முடியும் என்பதை தொடக்கிவைத்தது நீங்கள்தான் அதை பயங்கரவாதி சஹ்றானும் உங்கள் பாணியில் செய்திருக்கிறான். 

நீங்கள் செய்த அத்தனைகொலைகளையும் நாங்கள் ஞாபகப்படுத்துவது கிடையாது ஆனால் எங்கள் உறவுகள் இறைவனுடன் உறவாடிக்கொண்டிருக்கும்போது கோளைத்தனமாக முதுகில் சுட்டதை எங்களால் மறக்க முடியவில்லை ஆனால் மன்னிப்பை கற்றுத்தந்த எங்களது மார்க்கத்தை பெருமைப்படுத்த அதை நாங்கள் மன்னித்துவிட்டோம் நாங்களும் மனிதர்கள் என்றவகையில் எங்களால் இதை மறக்க முடியவில்லை. இன்று நாங்கள் 29 ஆம் ஆண்டு நினைவு நாளை அனுஷ்டிக்கின்றோம்.


பொறியியலாளர் சிப்லி பாறுக்
முன்னால் கிழக்கு மாகான சபை உறுப்பினர்No comments