காத்தான்குடி பள்ளிவாயல்களில் பாஸிச விடுதலைப்புலி பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டு 29 வது ஆண்டு ஷுஹதாக்கள் தினநினைவுப் பேரணி!S.சஜீத்
கடந்த 03.08.1990 இல் காத்தான்குடி மஸ்ஜிதுல் மீரா பெரிய ஜூம்ஆ பள்ளிவாயலிலும், மஸ்ஜிதுல் ஹூசைனியா பள்ளிவாயலிலும் பாஸிச தமிஈழ விடுதலைப் புலிப்பயங்கரவாதிகளால் 103 அப்பாவி முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட 29வது வருட ஷுஹதாக்கள் நினைவு தினம் (03.08.2019) இன்றாகும்.இதனை முன்னிட்டு (03) இன்று சனிக்கிழமை ஸ்ரீலங்கா ஷூஹதாக்கள் ஞாபகார்த்தக நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்ற ஷுஹதாக்கள் நினைவுப் பேரணியானது காலை 8.30 மணியளவில் பிரதான வீதி ஹிஸ்புல்லாஹ் கலாச்சார மண்டப முன்பாக இருந்து ஆரம்பம் செய்யப்பட்டு - பிரதான வீதி, சுகதாக்கள் சதுக்கம் வரை கைகளில் பதாதைகள் ஏந்தியவாறு சென்றன.மேலும் இப் பேரணி இறுதியின் போது ஸ்ரீலங்கா ஷூஹதாக்கள் ஞாபகார்த்தக நிறுவனத்தினால் 29வது ஷூஹதாக்கள் தின பிரகடனம் ஒன்று நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் எம்.ஷாமில் அவர்களினால் ஊடகங்கள் முன்னிலையில் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த 29வது நினைவுப் பேரணியில் நகரசபை தவிசாளர் மற்றும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் உற்பட பொதுமக்கள், ஊர்பிமுகர்கள் மற்றும் உலமாக்கள் என்று பலர் கலந்து கொண்டிருந்தனர்.

No comments