மண்முனைப் பற்று பிரதேசத்திற்கான SLMC இன் அமைப்பாளராக மதீன் நியமனம்

ஏ.எல்.டீன் பைருல்

மட்டக்களப்பு மண்முனைப் பற்று பிரதேசத்திற்கான SLMC இன் அமைப்பாளராக மதீன் நியமிக்கப்பட்டுள்ளார். 

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின்  மண்முனைப் பற்று   பிரதேச சபையின் முன்னால் உறுப்பினர் AAM. மதீன் கட்சியின் (SLMC) மண்முனைப் பற்று பிரதேசத்திற்கான அமைப்பாளராக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்
கட்சியின் தலைவர் றவூப் ஹக்கீம் அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான கடிதம் (28.07.2019 ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளரும், முன்னால் கிழக்கு மாகான சபை உறுப்பினரும், காத்தான்குடி நகரசபை உறுப்பினருமான பொறியியலாளர் சிப்லி பாறூக்கினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 

மேற்படி நிகழ்வின் போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின்  பிரதேச சபை உப்பினர்கள், கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், உலமாக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


No comments