காத்தான்குடி தொடர்பில் பேராசிரியர் மெதகொட அபேதிஸ்ஸ தேரரின் கருத்துக்கு காத்தான்குடி நகர சபை உள்ளிட்ட அமைப்புகள் பலத்த கண்டனம்.




காத்தான்குடி பிரதேசத்தில் இஸ்லாமிய மதத்தின் ஷரிஆ சட்டத்தின் கீழ் 20 பேருக்கு மரண தண்டனை வழங்கியுள்ளதாக  "வஹாபி தீவிரவாதத்தை எமது தாய் நாட்டிலிருந்து விரட்டுவோம்" என்ற தொனிப்பொருளில் வியாழக்கிழமை(4) கொழும்பு நுகேகொடையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்ட போதே பேராசிரியர் மெதகொட அபேதிஸ்ஸ தேரர்  தெரிவித்தார்.


பேராசிரியர் மெதகொட அபேதிஸ்ஸ தேரரின் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை வன்மையாக கண்டிப்பதாக காத்தான்குடி நகரசபை மற்றும் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், ஜம்இய்யதுல் உலமா சபை ஆகியன இணைந்து நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேற்படி ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் கெளரவ பேராசிரியரின் கருத்து உண்மைக்கு புறம்பானது என்றும் தொடர்ச்சியாக காத்தான்குடி மீது தொடர்சியாக மத குருமார்கள், பேராசிரியர்கள் இனவாத கருத்துக்களை தெரிவித்து வருவதை வன்மையாக கண்டிக்கிறோம். நுகேகொடை கூட்டத்தில் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை தெரிவித் பேராசிரியர் மெதகொட அபேதிஸ்ஸ தேரரின் கருத்தை காத்தான்குடி பொறுப்பு வாய்ந்த நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் வன்மையாக கண்டிப்பதுடன் இது தொடர்பில் சட்ட ஆலோசனைகள் பெறப்பட்டு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.


இவ் ஊடக சந்திப்பில் காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் எம்.ஏ.சி.எம்.சத்தார் ,செயலாளர் ஏ.எல்.எம்.சபீல் (நளீமி), ஜம் இய்யதுல் உலமா சபை தலைவர் ஏ.எம்.ஹாறூன் (றஷாதி),செயலாளர் ரீ.எம்.எம்.அன்ஸார்(நளீமி) மற்றும் நகர சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

(எம்.பஹ்த் ஜுனைட்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.