உதைபந்தாட்டப் போட்டியில் தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ள காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்களுக்கு மகத்தான வரவேற்பு

(பாரிஸ் அமானுல்லாஹ்)காத்தான்குடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)  இன் 18 வயதிற்குட்பட்டவர்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியில் மேற்படி பாடசாலை மாணவர்கள் குழாம்  மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.மேற்படி போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்கள் மற்றும்
இம்மாணவர்களை  பயிற்றுவித்த ஆசிரியர்களை கௌரவித்து வரவேற்கின்ற நிகழ்வு இன்று (17.07.2019 புதன்கிழமை) கல்லூரியில் வெகு விமர்சையாக இடம் பெற்றது.கல்லூரியின் அதிபர் S.H.M.பிர்தௌஸ்  தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் டாக்டர் MMS. உமர் மௌலானா பிரதம அதிதியாக கலந்து கொண்ட துடன் காத்தான்குடி (தற்காலிக) கோட்டக் கல்விப் பணிப்பாளராக அண்மையில் நியமனம் செய்யப்பட்ட A.G.M. ஹக்கீம்  மற்றும் ஓய்வு பெற்ற    முன்னாள்  கோட்டக் கல்விப் பணிப்பாளர் M.A.C.M.பதுர்தீன்,  வலயக் கல்விப் பணிமனையின் அதிகாரிகள், பாடசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், கல்லூர உதைப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொணடு சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.