திருகோணமலை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்
ஏ.ஆர்.எம்.றிபாஸ்
கிண்ணியா நிருபர்

பட்டதாரிகளின் தொழில் உரிமைகளை கேள்விக் குறியாக்கும், உள்வாரி, வெளிவாரி என்ற பாகுபாட்டை நிறுத்தி பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற அனைவருக்கும் பட்டம் பெற்ற ஆண்டின் அடிப்படையில் நியமனம் வழங்க வேண்டும் என இன்று (31) திருகோணமலை மாவட்ட  வேலையற்ற பட்டதாரிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக வேலையட்டப்பட்டதாரிகள் ஆண்டு அடிப்படிப் படையில் நியமனம் வழங்க கோரி ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டார்கள்

பட்டம் பெற்ற ஆண்டு அடிப்படையில் 2012 தொடகம் 2018 வரையுள்ள வெளிவாரிப்பட்ட தாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட வேண்டும்HNDA ,HNDE பட்டதாரிகள் அரச நியமனத்தில் உள்வாங்கப்பட வேண்டும்

கடந்த 30 வருடகால  யுத்தத்தில் அதிகமாகபாதிக்கப்பட்ட வடக்கு ,கிழக்கு மாகாண பட்டதாரிகளை ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடாமல் விசேட சலுகை அடிப்படையில் நியமனத்தில் உள்வாங்க வேண்டும்நாடு பூராகவும் உள்ள 35 வயதுக்கு மேற்பட்ட பட்டதாரிகள் அரச நியமனம் பெறும் வயதை தாண்டிய நிலையில் காணப்படுகின்ற அனைவ ஒக்கும் சலுகை அடிப்படையில் நியமனம்  வழங்கப்பட வேண்டும்

போன்ற பல நிபந்தனைகளின் அடிப்படையில் போராட்டத்தில் ஈடுபட்டார்ள் 

இதன் போது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வியாேழேந்திரன் சம்பவ இடத்துக்கு வருகைதந்திருந்தார் அவரிடத்தில் மகஜர் கையளிக்கப்பட்டது


பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வியாேழேந்திரன் 
அளுநருடன் பேசி  ஆளுநரை ஆர்ப்பாட்ட இடத்துக்கு வரவழைத்து பட்டதாரிகளின் பிரச்சினைகளை  தெரியப்பத்தினார்

ஆளுநர்  பட்டதாரிகளுக்கான நியமனத்தில் நடவடிக்தை எடுப்பதாகவும் தெரிவித்தார்


No comments