காத்தான்குடி அதிபர் சங்கத்தின் ஏற்பாட்டினில் சேவை நலன் பாராட்டு


ஏ.எல்.டீன் பைரூஸ்
காத்தான்குடி பிரதேச கல்விப்பணிப்பாளராக கடமையாற்றி இன்று (7.7.2019) ஓய்வு பெறும் தேசமாணிய, தேசகீர்த்தி எம்.ஏ.சீ.எம்.பதுர்தீன் அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு காத்தான்குடி பிரதேச பாடசாலைகளின் அதிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் 06.07.2019 சனி மதியம் காத்தான்குடி மெரினா பீச் மண்டபத்தில் இடம்பெற்றது.


காத்தான்குடி அதிபர் சங்கத்தின் தலைவர் எம்.ஏ.சீ.எம்.சத்தார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கிழக்கு மாகான முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக பங்கேற்றதுடன், காத்தான்குடி நகர முதல்வர் எஸ்.எச்.எம்..அஸ்பர், மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்கடர் எஸ்.எம்.எம்.எஸ்.உமர்மௌலானா, நிருவாக உத்தியோகஸ்தர் சீ.எம்.ஆதம்லெப்பை, உதவிக்கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், அதிபர்கள்,உத்தியோகஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


நான்கு தசாப்த காலங்களுக்கு மேல் கல்விக்காக பணியாற்றி ஓய்வு பெறும் தேசமாணிய, தேசகீர்த்தி எம்.ஏ.சீ.எம்.பதுர்தீன்JP/SLPS1 அதிதிகளால் பொன்னாடை போத்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.No comments