காத்தான்குடி நகரசபை உறுப்பினர் பதவியினை இராஜினாமா செய்வதாக இல்மி அஹமட் லெப்பை அறிவிப்பு

(ஏ.எல்.டீன் பைரூஸ்)காத்தான்குடி நகரசபையின் உறுப்பினராக கடந்த 17 மாதங்கள் பணியாற்றி வந்த பிரபல சமூக சேவையாளர், அகில இலங்கை சமாதான நீதவானுமாகிய இல்மி அஹமட் லெப்பை தனது நகரசபை உறுப்பினர் பதவியினை இராஜினாமா செய்வதாக இன்று 25.07.2019 வியாழன்) நடைபெற்ற நகரசபை அமர்வின் போது அறிவித்துள்ளார்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னனி (கட்சியின்) சார்பில் இவர்  நகரசபை உறுப்பினராக  சேவையாற்றி வந்தார் என்பதுடன் கட்சியின் மீழலைத்தல் (ReCalling) என்ற அடிப்படையில் இவர் தனது பதவியினை இன்று இராஜினாமா செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments