பிரதேச சபை உறுப்பினர் எஸ்.ஏ.அன்வர் ஆசிரியரின் முயற்சியில் மீராவோடையில் வீதிகள் அபிவிருத்தி


எம்.ரீ. ஹைதர் அலி

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் மீராவோடை கிழக்கு வட்டார உறுப்பினர் எஸ்.ஏ.அன்வர் ஆசிரியரின் அயராத முயற்சியின் காரணமாக மீராவோடை நூராணியா வீதி மற்றும் அல் ஹிதாயா மகா வித்தியாலய பின் குறுக்கு வீதி என்பன முன்னாள் சமூக வலுவூட்டல் மற்றும் ஆரம்பக்கைத்தொழில் இராஜாங்க அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸின் மட்டு.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செய்யித் அலி ஸாஹிர் மெளலானாவின் நிதியொதுக்கீட்டில் கொங்றீட் வீதியாக அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன.இவ்வீதிகளின் அபிவிருத்திப் பணிகளுக்காக ஒரு வீதிக்கு தலா ஒரு மில்லியன் ரூபாய் வீதம் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு, பிரதேச சபை உறுப்பினர் எஸ்.ஏ.அன்வர் ஆசிரியர் தனது வட்டாரத்தை அபிவிருத்தி செய்வதில் அதீத அக்கறை காட்டி வருவதுடன், எந்தவித பிரபல்யத்தையும் எதிர்பாராது, மறைமுகமாக தனது சொந்த நிதியிலிருந்து பல்வேறுபட்ட உதவிகளையும் செய்து வருகின்றார்.பிரதேச கல்வி வளர்ச்சி, வாழ்வாதார மேன்பாட்டுக்கும் தனது சக்திக்குட்பட்டு தன்னாலான முழுப்பங்களிப்பையும் வழங்கி வருவதுடன், எதிர்காலத்தில் பல்வேறு பணிகளை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளார்.வட்டார மக்களின் தேவையறிந்து சேவையாற்றி வரும் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.ஏ.அன்வர் ஆசிரியருக்கு முஸ்லிம் காங்கிரஸின் மீராவோடை கிழக்கு வட்டாரக்குழு மற்றும் பிரதேச மக்கள் சார்பாக மனப்பூர்வமான வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.