காத்தான்குடி பிரதேசக் கல்விப் பணிப்பாளர் கெளரவிப்பு மற்றும் ஹஜ் வழியனுப்பும் நிகழ்வும்.

காத்தான்குடி மட்/ சுகதா வித்தியாலயத்திலிருந்து இவ்வருடம் புனித ஹஜ் பயணத்தை மேற்கொள்ளவிருக்கும் சக ஆசிரியை சமீஹா கலந்தர்  லெப்பை அவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் மற்றும் எமது ஊரில் சுமார் 40 வருட காலம் ஆசிரியராக, அதிபராக கடமையாற்றி  இறுதியாக காத்தான்குடி பிரதேசக் கல்விப் பணிப்பாளராக பணியாற்றி எதிர்வரும் (07.07.2019) ஓய்வு பெறுகின்ற அல்ஹாஜ் MACM. பதூர்தீன் SLPS i /JP அவர்களது கல்விப் பணிகளை நினைவுகூர்ந்து கெளரவிக்கும் நிகழ்வு (01.07.2019 திங்கள்)  வித்தியாலயத்தின் அதிபர் அல்ஹாஜ் MCM. முனீர் தலைமையில் இடம்பெற்றது.மேற்படி நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் SMMS. உமர் மெளலானா, உதவிக் கல்விப் பணிப்பாளரும் காத்தான்குடி பிரதேசக் கல்விப் பணிப்பாளராக நியமனம் பெறவிருக்கும் AGM. ஹக்கீம், பிரதேசக் கல்விப் பணிப்பாளராக ஓய்வு பெறுகின்ற அல்ஹாஜ் MACM.  பதூர்தீன், ஆரம்பக் கல்வி ஆசிரிய ஆலோசகர் MM. முதர்ரிஸ் மற்றும் ஆசியர்கள் கலந்து சிறப்பித்தனர். பகற்போசனத்துடனான இவ்வைபவத்தை பாடசாலையின் ஆசிரியர் நலன்புரி சங்கம் ஏற்பாடு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

(ஆசிரியர் நிசார் )No comments