பிரித்தானிய தூதரக அரசியல் பிரிவு பிரதானியுடன் NFGG யின் பிரதித் தவிசாளர் அப்துர் ரஹ்மான் விசேட சந்திப்பு!

பிரித்தானிய தூதரக  அரசியல் பிரிவு பிரதானி  நெய்ல் கவனாஃக்    அவர்களுடனான விசேட சந்திப்பொன்றினை   நல்லாட்சிக்கான தேசிய முன்னணி(NFGG)யின் பிரதித்தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் மேற்கொண்டார்.  பிரித்தானிய தூதரக  அலுவலகத்தில் நேற்று (04.06.2019) இடம் பெற்ற இச்சந்திப்பில் சட்டத்தரணி MIM அஸ்வர் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.இச்சந்திப்பின் போது இலங்கையின் சமகால அசாதாரண நிலமைகள் குறித்தே கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக கடந்த ஒன்றரை மாத  காலங்களில் இலங்கை முஸ்லிம்கள் முகம் கொடுத்துவரும்  இனவாத சவால்கள் குறித்து பிரித்தானிய தூதரக அரசியல் பிரிவு பிரதானிக்கு  அப்துர் ரஹ்மான் இதன்போது  தெளிவுபடுத்தினார்.


ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையிலேயே முஸ்லிம்கள் மீதான வன்முறைகள் தொடராக நடந்து வருவது பற்றியும், 

பயங்கரவாத தடைச்சட்டம் அமுலில் உள்ள நிலையிலேயே பெருந்தொகையான நபர்கள் ஒன்று திரட்டப்பட்டு  இனவாத அச்சுறுத்தல்கள் பகிரங்கமாகவே மேற்கொள்ளப்படுகின்றன என்றும் , இது  முஸ்லிம் மக்களின் பாதுகாப்பினை பெரிதும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன் நியாயமான காரணங்களின்றி சந்தேகத்தின் பெயரில்  தொடர் கைதுகள் இடம்பெறுவது பற்றியும் , கைது செய்யப்பட்டவர்களில் பலர் விசாரனைகளின்றி  இன்னும் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றமை குறித்தும் சுட்டிக்காட்டினார்.


தீவிரவாத- பயங்கரவாத ஆபத்துக்கள்  பற்றிய தகவல்களை முஸ்லிம் சமூகம் முன்கூட்டியே  அரசாங்கத்திற்கு வழங்கியிருந்தனர்.ஆனால் அரசாங்கம் அதனை கண்டு கொள்ளவில்லை. ஈஸ்ட்டர்தின தாக்குதல்களுக்குப் பின்னரும் கூட பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் பாதுகாப்பு முன்னெடுப்புகள் அனைத்திற்குமே முஸ்லிம் சமூகம் தனது முழுமையான ஒத்துழைப்புகளை இன்று வரை வழங்கியே வருகின்றது.. இலங்கை வரலாற்றில்  பயங்கரவாதத்திற்கெதிரான இது போன்ற முழுமையான    ஒத்துழைப்புகளை வேறு எந்த சமூகங்களும் வழங்கியதாக தெரியவில்லை. எனினும் அரசாங்கம் இவை அனைத்தையும் புறந்தள்ளி இந்நாட்டு முஸ்லிம்களை பாதுகாக்கத்தவறியிருக்கின்றமை குறித்து தனது கவலைகளையும் அவர் தெரிவித்தார்.


இதன் போது கருத்துத்தெரிவித்த பிரித்தானிய தூதரக அரசியல் பிரிவு பிரதானி அவர்கள்,   இது தொடர்பில் தாங்கள் போ திய அவதானத்தினை செலுத்தி வருவதாகவும்,. இலங்கை அரசுக்கு பல தலதடவைகள் இது பற்றி எடுத்து கூறியிருப்பகவும், சட்டவாட்சியினை உறுதி செய்யும் பொருட்டு   தமது இரஜதந்திர அழுத்தங்களை தொடர்ந்தும் கொடுக்க  எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். இலங்கை அரசின் போக்கு தொடர்பில்  அறபு நாடுகளின் கூட்டமைப்பினால் வெளியிடப்பட்ட அறிக்கையானது நிச்சயம் அரசாங்கத்திற்கு பாரிய அழுத்தத்தினை  செலுத்தும் என்பதுடன் மேலும் பல நாடுகளுடன் இணைந்து இவ்வாறான முன்னேடுப்புகளை தானும் முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


NFGGஊடகப் பிரிவு)

No comments