ஜனாதிபதியின் அறிவிப்பினை அடுத்து தூக்கிலுடும் பணியை நிறைவேற்றுவதற்கு இருவர் எந்நேரத்திலும் தயாராக உள்ளனர்


ஜனாதிபதியின் அறிவிப்பினை அடுத்து தூக்கிலுடும் பணியை நிறைவேற்றுவதற்கு  அலுகோசு இருவர் எந்நேரத்திலும் தயாராக உள்ளனர். 

அலுகோசு பதவிக்கு இருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள  இருவருக்கும் 2 வாரங்கள் அடிப்படை பயிற்சி வழங்கப்பட்டுள்ளதுடன் மருத்துவ பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும், தூக்கிலுடும் பணியை நிறைவேற்றுவதற்கு அவர்கள் எந்நேரத்திலும் தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.q


அந்தவகையில் இவர்களின் அடையாளத்தை எந்த ஊடகத்திற்கும் வெளிப்படுத்தாதிருக்க சிறைச்சாலை அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் 1976 ஆம் ஆண்டிலிருந்து மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 

இந்த பணிக்கு “திடமான குணாதிசயம்” கொண்டவர்கள் தேவையென பெப்ரவரி மாதம் விளம்பரம் செய்யப்படவுடன், சுமார் 100 க்கு அதிகமானோர் அதற்கு விண்ணப்பித்து இருந்தனர். 

அவர்கள் இலங்கையை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். வயது 18-45 க்குள் “வலுவான மனநிலையுடன்” இருக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த பணிக்கு 2 அமெரிக்கர்கள் மற்றும் 2 பெண்களும் விண்ணப்பித்திருந்தனர். 

சிறைத் துறையின் செய்தி தொடர்பாளர், பணிக்கு தேர்வு செய்யப்பட்ட இருவரும் இரண்டு வாரம் நடைபெறக் கூடிய பயற்சியில் பங்கெடுப்பார்கள் என்று தெரிவித்தார். 

5 வருடத்துக்கு முன்பு தூக்கிலிடும் பணியில் இருந்தவர் தூக்கு மேடையை பார்த்த அதிர்ச்சியில் பணியை இராஜிநாமா செய்துவிட்டார். 

கடந்த வருடம் அந்த பணிக்காக தேர்வு செய்யப்பட்டவர் பணியில் சேரவே இல்லை. 

இலங்கையில், பாலியல் வல்லுறவு, போதைப் பொருள் கடத்தல் மற்றும் கொலை ஆகியவற்றுக்கு தூக்கு தண்டனை வழங்கப்படுகிறது. ஆனால் கடந்த 1976 ஆம் ஆண்டிருந்து யாரையும் தூக்கிலிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

No comments