பாடசாலையின் அபிவிருத்தி நிர்மாண வேலைகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளை ஹிஸ்புல்லாஹ் பணிப்பு.(ஊடகப்பிரிவு) 

மட்டக்களப்பு மத்தி வலயத்தின் காத்தான்குடி கோட்டக்கல்விப் பிரிவிற்குற்பட்ட பகுதியில் கிழக்கு மாகாண முன்னால் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் நிதியொதுக்கீட்டில் இடம்பெறும் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை இன்று (29) காலை  அதிகாரிகள் சகிதம்  எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நேரில் சென்று பார்வையிட்டார்.இதற்கமைவாக காத்தான்குடி மத்திய கல்லூரி, அல்-அமீன் வித்தியாலயம், மீராபாலிகா மகளிர் கல்லூரி மற்றும் மில்லத் மகளிர் கல்லூரி ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் பாடசாலை கட்டிட அபிவிருத்தி வேலைகளை இக்குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.இதன்போது காலதாமதமாக மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டிட நிர்மாண வேலைகளை மிக அவசரமாக நிறைவு செய்யுமாறு  எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கட்டிட நிர்மாண வேலைகளுக்கு பொறுப்பான அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.


இவ் விஜயத்தில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் கல்விப்பணிப்பாளர் உமர் மௌலானா, காத்தான்குடி பிரதேச கல்விப்பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.பதுர்தீன், மட்டக்களப்பு மத்தி வலயத்தின் மாவட்ட சிரேஷ்ட பொறியியலாளர் முகம்மட் ஹக்கீம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இதன்போது பங்கேற்றனர்.

No comments