இரத்த தானம் வழங்கும் நன்கொடையாளர்களை நாம் ஊக்குவிக்க தவறிவிடுகிறோம் டாக்டர் ஜாபிர் தெரிவிப்பு-எம்-.எச்-.எம் .அன்வர்-

உயிர்களை காக்கும் உதிரங்களை வழங்கும் நன்கொடையாளர்களை நாம் ஊக்குவிப்பதுமில்லை கண்டுகொள்வதுமில்லை.இவ்வாறு காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இரத்தம் வழங்கும் சமூக நிறுவனங்களுடனான கலந்துரையாடலின் போது வைத்திய அத்தியட்சகர் Dr.MSM ஜாபிர் தெரிவித்தார்.அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,


எதையெல்லாமோ கௌரவிக்கிறோம் ஆனால், இத்தகைய நன்கொடையாளர்களின் தேவைகளை அறிந்து செயற்பட முடியாமல் உள்ளோம்.


இப்பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் நாற்பத்தொரு தடவைகள் இரத்தம் வழங்கியுள்ளார்.இரத்தம் வழங்குவதால் பல உயிர்கள் பாதுகாக்கப்படுகின்றன.அத்துடன் மாவட்டத்திலேயே கணிசமான அளவு இரத்தம் வழங்கியுள்ளது இந்த பிரதேசமாகும்.உதிரம் கொடுக்கும் பணியினை மேலும் நாம் ஊக்கப்படுத்த வேண்டும்.இதற்கான நிகழ்வொன்றினை மிக விரைவில் நடாத்த ஏற்பாடு செய்துள்ளோம் அதற்கு பூரண ஒத்துழைப்புக்களை நல்குமாறு தெரிவித்தார்.


மேற்படி நிகழ்வில் காத்தான்குடி இரத்த வங்கிக்கு பொறுப்பான வைத்தியர் Dr.உமா சங்கர் , தாதிய உத்தியோகத்தர்கள், சமூக நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து சிறப்பித்தனர்.

No comments