வர்த்தக சங்கங்களின் அனுசரணையுடன் கல்முனை மாநகரில் பொஷன் விழாகல்முனை மற்றும் சாய்ந்தமருது வர்த்தக சங்கங்களின் அனுசரணையுடன் இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் கல்முனை மாநகர சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட  பொஷன் விழா கல்முனை மாநகரில் (16) சிறப்பாக இடம்பெற்றது.கல்முனை மாநகர முதல்வர்  சட்டத்தரணி ஏ.எம்.றகீப்  தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பைசல் காசிம், எச்.எம்.எம்.ஹரீஸ், அம்பாரை மாவட்ட இரானுவக் கட்டளத்தளபதி மேஜர் ஜென்றல் மஹிந்த முதலிகே, கல்முனை ஸ்ரீ சுபத்திரராம விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர், சமயத் தலைவர்கள், பொலிஸ் உயர் அதிகாரிகள், இரானுவ உயர் அதிகாரிகள், மாநகர சபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், வர்த்தகர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

(ஊடகப் பிரிவு)
No comments