பதவிகளைத் துறந்தாலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மக்கள் பணி தொடர்கின்றது


மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் 20லட்சம் நிதி ஒதுக்கீட்டின் மூலம் இரு வீதிகள் புணரமைக்கப்பட்டும்அதேபோல் ஆறுமாதகால தையல் பயிற்சி நிறைவு செய்த யுவதிகளுக்கான தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வும் மஞ்சந்தொடுவாய் முஹைதீன் ஜும்ஆ பள்ளியில் அமைச்சரின் ஜந்து இலட்சம் ரூபா நிதியொதிக்கீட்டில் நிர்மானிக்கப்பட்ட கூடாரம் மக்களின் பாவணைக்கு கையளிக்கும் நிகழ்வும் (16.06.2019 ஞாயிறு) கட்சியின் அமைப்பாளரும் முன்னாள் மட்டு.மாநகர சபை உறுப்பினருமான M.றம்ழான் தலைமையில் இடம்பெற்றது.இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி MSS. அமீர் அலி MP கலந்து கொண்டு திறந்து வைத்தார்.இந்நிகழ்வில் காத்தான்குடிநகர சபை உறுப்பினர் TL.ஜெளபர் ஹான், முன்னாள் நகரசபைஉறுப்பினரும் அமைச்சரின் இணைப்பாளருமான AMM.மாஹிர் ஹாஜியார்,மத்திய குழு செயலாளர் SM சப்ரி, கொள்ளைபரப்புச் செயலாளர் MSM.முகைதீன் சாலி ,வட்டார அமைப்பாளர்களான ஜலால்தீன் ஹாஜியார்,முகம்மட் பாயிஸ்  மற்றும் அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் MSM.ரிஸ்மின் (BA) கல்குடா இளைஞர் அணி தலைவர் முகம்மட் ஜவ்பர், அப்பகுதி பள்ளிவாயல்களின் தலைவர் செயலாளர்கள்,மீனவர்சங்க தலைவர் செயலாளர், பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் பயனாளிகள் உட்பட ஏனைய பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

எஸ்.எம்.ஸப்ரிNo comments