காத்தான்குடி சம்மேளனத்தின் இன நல்லுறவுக்கான கலந்துரையாடல்

..

(எம்.பஹ்த் ஜுனைட்)

நாட்டில் சமாதானம் மற்றும்  தேசிய ஒருமைப்பாட்டை கட்டியெழுப்பும் வகையிலும் பிரதேசங்களில் இனங்களுக்கிடையிலான இன நல்லுறவு, சமாதானம், சகவாழ்வு, ஒற்றுமை மற்றும் இன ஐக்கியத்தை வளர்க்கும் நோக்கிலும்  மட்டக்களப்பு மாவட்ட பல்சமய மதகுருமார்களுடனான முக்கிய கலந்துரையாடல் நிகழ்வு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் மெளலவி ஏ.எல். ஆதம்லெப்பை (பலாஹி) தலைமையில் சனிக்கிழமை (15)  சம்மேளனத்தின் அஷ்ஷஹீத் அல்ஹாஜ் ஏ அஹமட் லெப்பை ஞாபகார்த்த மண்டபத்தில்  இடம்பெற்றது..

இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடலின் போது அமெரிக்கா சிலோன் மிஷன் திருச்சபைத் தலைவர் ரீ.தேவநேசன், இணையத்தின் தலைவர் சீலன்,நல்லிணக்க குழுவின் இணைப்பாளர் கமலதாஸ் மற்றும் சிவபாலன் குருக்கள் ஆகியோர் சிறப்புரையாற்றியதுடன் , மட்டக்களப்பு மாவட்ட பல் சமய தலைவர்கள், காத்தான்குடி சம்மேளனத்தின் உறுப்பினர்கள், பாதுகாப்புப் படையினர், அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


No comments