முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து நடத்தப்படும் வன்முறைகள் தொடர்ந்தும் அதிகரித்தால் இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகள் விதிக்கப்படும்.


உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து நடத்தப்படும் வன்முறைகள் தொடர்ந்தும் அதிகரித்தால், இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என சர்வதேச இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பு எச்சரித்துள்ளது.

பொறுமையானவர்கள், அமைதியான நாட்டவர்கள் என்று இலங்கையர்கள் பெற்றுக்கொண்டுள்ள நற்பெயரை தொடர்ந்தும் பாதுகாத்துக்கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்தும் அதிகரித்தால், அவற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அரசாங்கம் தவறினால், இலங்கையுடனான தொடர்புகள் துண்டிக்கப்படும் என்பதுடன் பொருளாதார தடைவிதிக்க நேரிடும் எனவும் சர்வதேச இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பு எச்சரித்துள்ளது.

சர்வதேச இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பு என்பது உலகில் பலமிக்க முஸ்லிம் நாடுகளை கொண்ட, முழு உலகத்துக்கும் அழுத்தம் கொடுக்கக் கூடிய சர்வதேச அமைப்பு என்பதுடன் இந்த அமைப்பில் 57 நாடுகள் அங்கம் வகித்து வருகின்றன.

சர்வதேச இஸ்லாமிய அமைப்பின் இந்த ஆண்டுக்கான கூட்டம் சவுதி அரேபியாவில் நடைபெற்றதுடன் அதில் அனைத்து உறுப்பு நாடுகளும் கலந்துகொண்டன. sor/ibcதமிழ்

No comments