நான் இராஜினாமா செய்யவில்லை: ஹிஸ்புல்லாஹ்

கிழக்கு மாகாண ஆளுநர் பதவியினை தான் இராஜினாமாச் செய்யவில்லை என ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் விடியல் இணையத்தளத்திற்கு தெரிவித்தார். 


தென் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோன் தனது பேஸ்புக் பக்கத்தில் “The Governer Resigned”  என தனது பதிவிட்டிருந்தார். 


இதனையடுத்து எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, தனது ஆளுநர் இராஜினாமாச் செய்துவிட்டார் என சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவின. 


இந்த நிலையில் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவினை விடியல் இணையத்தளம் தொடர்புகொண்டு வினவிய போது, ஆளுநர் பதவியினை இராஜினாமாச் செய்யவில்லை என உறுதிப்படுத்தினார்.

No comments