ஆளுநரின் இப்தார் நிகழ்வு திருகோணமலையில் உள்ள ஆளுநர் வாசஸ்தளத்தில் இடம் பெற்றது.

ஊடகப்பிரிவு

கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வின் ஏற்பாட்டில் புனித இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு திருகோணமலையில் உள்ள ஆளுநர் வாசஸ்தளத்தில் நேற்று மாலை சர்வமத தலைவர்களின் பங்கேற்புடன் வெகு சிறப்பாக இடம் பெற்றது.

இவ் இப்தார் வைபவத்தில் சர்வமத தலைவர்களின் ஆசிர்வாத உரைகள் இடம்பெற்றதுடன் இப்தார் சிந்தனை சொல்லப்பட்டு நாட்டில் அமைதி சமாதானம் வேண்டி துஆப்பிரார்த்தனை நிகழ்த்தப்பட்டு அதானும் சொல்லப்பட்டு புனித இப்தார் நிகழ்வும் இடம்பெற்று தொழுகையுடன் நிறைவுபெற்றது.

இப்தார் நிகழ்வுக்கு வருகை தந்த அதிதிகளுக்கு ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் இராப்போசன ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் மக்கள் பிரதிநிதிகள் உயர் கல்வி அதிகாரிகள் பாதுகாப்பு பொறுப்பாளர்கள் என பலரும் பங்கேற்றனர்.

No comments