அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஏன் பதவி விலக வேண்டும்.....?

இன்று சில                பேரினவாதிகளும்    அதிகாரமற்ற முஸ்லிம் அரசியல் தலைவர்களும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பதவி விலக வேண்டும் என்று கொக்கரித்து தெரிகின்றனர் அவர்களிடம் சில கேள்விகள்


✓•அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பதவி விலகுவதால் நீங்கள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் இல்லாமல் போய்விடுமா?


✓•அமைச்சர் றிஷாத் பதியுதீன் பதவி விலகுவதால் அவர் குற்றம் செய்தவர் அல்லது குற்றம் செய்யாதவர் என்று நிரூபிக்க முடியுமா?


✓•அமைச்சர் ரிசாத் பதியுதீன் பதவி விலகுவதால் முஸ்லிம் சமூகத்திற்கு என்ன நன்மை?


✓•அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பதவி விலகுவதன் மூலம் பேரினவாதிகள் முஸ்லிம் சமூகத்தின் மீது முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் முஸ்லிம் சமூகத்தின் மீதான கெடுபிடிகள் இல்லாமல் போய்விடுமா?


✓•அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் குற்றங்கள் நிரூபிக்கப்படாத சூழ்நிலையில் அவர் குற்றங்களை நிராகரிக்கின்ற நிலைமையில் ஏன் அவர் பதவி விலக வேண்டும்?


மேற்கூறிய கேள்விகளை சிந்தித்து பார்க்கின்ற போது நீங்கள் முன்வைக்கும் என்ற குற்றச்சாட்டுக்கும் அவர் பதவி விளக்குவதன் மூலம் எந்த வித தொடர்பும் இல்லை


ஆகவே ரிசாத் பதியுதீனை பதவி விலகச் சொல்பவர்களின் பிரதான நோக்கம் ரிஷாத் மீது உள்ள தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியும் ரிஷாட் பதியுதீன் பதவி விலகல் மூலம் இந்த அரசாங்கத்தில் பிளவுகளை ஏற்படுத்தி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்பவர்களின் ஒரே குறிக்கோளாக காணப்படுகிறது 


இதனால் ரிஷாத் பதியுதீன் பதவி பதவி விலகுவதன் மூலம் முஸ்லிம் சமூகத்துக்கு பெரும்பான்மை சமூகத்துக்கு எந்த நன்மைகளும் இல்லை பதவி விலகச் சொல்பவர்கள் மறைமுகமாக எதிர்பார்ப்பது ரிசாத் பதியுதீன் இராஜினாமா செய்வதன் மூலம் அமைச்சர் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை அவர் மறைமுகமாக ஏற்றுக் கொள்கிறார் என்று பதவி விலகிய பிற்பாடு ஊடக யுத்தம் ஒன்றை மேற்கொள்வதற்கான முயற்சியை அவர் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுபவர்களின் திரைமறைவில் இருக்கின்ற பிரதான நோக்கமாகும் 


அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பொருத்தமட்டில் அமைச்சுப் பதவி என்பது தான் அணிந்திருக்கும் ஆடைக்கு சமனானது எந்த நேரத்திலும் அதை தூக்கி எறிவதற்கு தயாராக இருக்கிறார் 


ஆனால் நியாயமற்ற சுயநல அரசியல் விமர்சகர்களுக்கும் தமது சுயநல அரசியல் நிகழ்ச்சி நிரல் களுக்காகவும்  அரசியல் அதிகாரத்தை எதிர்ப்பார்த்து இருப்பவர்களின்  நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக ஒருபோதும் அவர் இராஜினமா செய்யமாட்டார் 


தனது சமூகத்திற்காகவும் தேசிய ரீதியில் நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் என்ற நியாயமான காரணம் இருந்தால் அமைச்சுப் பதவியை மட்டுமல்ல தனது முழு அரசியல் வாழ்க்கையும் தூக்கி எறிவதற்கு தயாரான ஒரு தலைவர் தான் ரிஷாத் பதியுதீன் என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்


இனவாதிகளின் இலக்கு அமைச்சர் றிசாட் பதியுதீன்னாக இருப்பதற்கான காரணங்களை 


1) குறுகிய காலத்தில் மக்கள் மனங்களில் இடம் பிடித்த மக்கள் சேவகன் றிசாட் பதியுதீன். 


2) மிகச்சிறிய காலத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை தோற்றி 5 பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பல பிரதேசசபை உறுப்பினர்கள் அடங்கிய கட்சியின் தலைமைத்துவம். 


3) ஒக்டோபர் 26 . 52 நாள் ஆட்சிமாற்றத்தின் சூத்திரதாரிகளை வீழ்த்தி ஆட்சியை தீர்மானித்த சக்தி. 


4) 2015 ஜனாதிபதி தேர்தலில் மகிந்த அரசை வீட்டுக்கு அனுப்ப முதலில் வெளியேறியமை. 


5) சிறிய வயதில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர். ஒரே அமைச்சு தொடர்ந்தும் அவர் வசம் இருந்தமை மற்றும் ஐந்து அமைச்சுக்களின் பொறுப்புதாரி. 


6) இதுவரைகாலமும் முஸ்லிம்கள் முஸ்லிம்களுள்ள சபைகளை பிரதினிதித்துவப்படுத்தி வந்த போதிலும் அமைச்சர் றிசாட் தனது கட்சியினூடாக தமிழர்கள் சபையையும் பிரதினிதித்துவப் படுத்துகின்றமை. 


7) தனது அமைச்சின் ஊடாக வாழ்வாதார உதவிகளை மூவின மக்களுக்கும் வழங்கி வருகின்றமை. மற்றும் செயல் திறனான சேவை. 


8 ) றிசாட் பதியுதீன் அமைச்சின் கீழ் அதிகமான திணைக்களங்கள் வருகின்றமையும், அதில் அதிக முஸ்லிம்கள் திணைக்களத்தலைவர்களாக உள்வாங்கப்படுகின்றமையும். 


9) பெரும்பான்மை அமைச்சர்களுக்கு முடியாமல் போன சதோச கட்டுமானத்தை மொடல் ஆக்கி வினைத்திறனாக்கியமை. 


10) வடக்கோடு மாத்திரம் நின்றுவிடாமல் கிழக்கிலும் தடம்பதித்து தனது ஆளுகையை நிறுவியமை. 


11) எதிர்காலத்தில் ஆட்சியை தீர்மானிக்கப்போகும் சிறுபான்மையினரின் பலம் பொருந்திய ஆலவிருட்சம். 


12) கலவரகாலங்களில் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைகின்றமை. மற்றும் அது தொடர்பில் அழுத்தம் பிரயோகித்தல் .


13) றிஷாத் பதியினை அடக்கி ஒடுக்குவதன் மூலம் முஸ்லிம் சமூகத்துக்கு எதிர்காலத்தில் யாரும் வாய் திறந்து பேசாமல் மௌனிகளாக்குவதற்கான மறைமுகத் திட்டம்


14) விஷால் பதியிலே அடக்குவதன் மூலம் எதிர்காலத்தில் முஸ்லிம் சமூகம் தொடர்பாக யாரும் வாய் திறந்தால் இவ்வாறு தான் நடக்கும் என்று மறைமுகமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்து முஸ்லிம் சமூகத்தை தவறுகளை தட்டி கேட்பதற்கு நாதியற்ற சமூகமாக மாற்றுதல்.


 இவ்வாறு பல்வேறு திட்டங்களுக்கான நிகழ்ச்சி நிரல் தான் ரிசாத் பதியுதீன் பதவி விலக வேண்டும் என்று சொல்பவர்களின் பிரதான குறிக்கோளாக காணப்படுகிறது


இவர்கள் அனைவரும் ஒரு விடயத்தை விளங்க வேண்டும் பதவியை வழங்குபவன் இறைவன் அதை பறித்து எடுப்பவனும் இறைவன் இவர்களால் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கால் தூச கூட ஒன்றும் செய்ய முடியாது என்பதை புரிந்து கொண்டால் சரிதான்.

(மருதூர் ஸக்கீ செய்ன)

No comments