(எம்.எம்.பஹ்த் ஜுனைட்)

புதிய காத்தான்குடி மீன்பிடி இலாகாவீதியில் உள்ள மெட்ரோ மர ஆலையில் இன்று (08) அதிகாலை 2.30 மணியளவில் தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

காத்தான்குடியை சேர்ந்த ரஜீன்  என்பவருக்குச் சொந்தமான இவ் மர ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் தளர்பாட தயாரிப்புகளுக்கு வைக்கப்பட்டிருந்த மரங்கள்  பகுதியளவில் எரிந்துந்துள்ளதுடன் பெறுமதியான மரம் வெட்டும் இயந்திரங்களும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது   இத் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை..

No comments