கலைக்கப்பட்ட சகல மாகாண சபை உறுப்பினர்களையும் அழைத்து கலந்துரையாடுமாறு ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு ஜனாதிபதி பணிப்புரைஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன மற்றும்  ஆளுநர்களுக்கிடையிலான விசேட சந்திப்பு இன்று (2)  இடம் பெற்றுள்ளது.


இதன் போது கலைக்கப்பட்ட சகல மாகாண சபை உறுப்பினர்களையும் மீண்டும் அழைத்து,உடனடியாக ஆளுநர்கள் நிலைமை தொடர்பாக கலந்துரையாட வேண்டுமென்றும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.அதேபோன்று அந்தந்த மாகாணத்தில் இருக்கின்ற சகல உள்ளூராட்சி சபைத் தலைவர்கள், பிரதித் தலைவர்களை உடனடியாக அழைத்து நிலைமை தொடர்பாக ஆராய்ந்து அவர்களோடு கலந்துரையாடி பாதுகாப்பிற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும்,அவர்களிற்கு அறிவுறுத்துமாறும் ஜனாதிபதி கேட்டுள்ளார்.

No comments