நாட்டுக்காக ஒன்றிணைவோம் அம்பாறை மாவட்ட நிகழ்ச்சித்திட்டம் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது. ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வும் வைபவத்தில் பங்கேற்பு.

(ஊடகப்பிரிவு) 

“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத் தொடரின் அம்பாறை மாவட்ட நிகழ்ச்சித்திட்டத்தின் இறுதி முன்னேற்ற மீளாய்வு நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று அம்பாறை, உஹன மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. 

மாவட்ட மக்களுக்காக பல நன்மைகள் பெற்றுக்கொடுக்கப்பட்டதுடன், வணக்கஸ்தலங்களின் அபிவிருத்திற்கான உதவிகள், மருத்துவமனைக்கு தேவையான அம்பியூலன்ஸ் வண்டிகளை வழங்குதல் மற்றும் உபகரணங்களை வழங்குதல், குடிநீர் கட்டமைப்புகள் மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் குடும்பங்களுக்கு வீட்டு நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை வழங்குதல், காணி உறுதிப் பத்திரங்களை வழங்கி வைத்தல், ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சிகளுக்கான பொறுப்புகளை கையளித்தல், சிறுவர் இல்லங்களுக்கான நிதி வழங்குதல், சுயதொழில் மற்றும் வாழ்வாதார செயற்பாடுகளின் அபிவிருத்திற்கான கடன் வழங்குதல், நன்னீர் மீன்பிடிக்கான வலைகளை வழங்குதல், சிறு கைத்தொழில் மற்றும் விவசாய உபகரணங்களை வழங்குதல், தென்னங்கன்று மற்றும் மர முந்திரிகை கன்றுகளை வழங்குதல், பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல், 

மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் வழங்கும் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு வேலைத்திட்டங்கள் ஜனாதிபதி அவர்களினால் அடையாளப்படுத்தப்பட்டன.


மகாசங்கத்தினர் உள்ளிட்ட மாகாணத்தின் ஏனைய மதத் தலைவர்களும் முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரட்ன, அமைச்சர் தயா கமகே, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், வடமத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீயானி விஜேவிக்ரம, முன்னாள் அமைச்சர் பீ.தயாரட்ன உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும், ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனெவிரத்ன உள்ளிட்ட அரச அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

No comments