காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற நல்லிணக்க இப்தார் நிகழ்வு.

0

(எம்.பஹ்த் ஜுனைட்)

நாட்டில் வாழும் இனங்களுக்கு இடையே நல்லிணக்கம் மற்றும் நல்லுறவை மேம்படுத்தும் நோக்கில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில்   நிலைய பொறுப்பதிகாரி நிஷாந்த பிரபாத் கஸ்தூரி ஆராச்சி தலைமையில் திங்கட்கிழமை (20)   இப்தார் நிகழ்வு இடம்பெற்றது.

இந் நிகழ்வில் மூவின மத குருமார்கள், கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எச்.டி.கே.எஸ். கபில ஜெயசேகர, மட்டக்களப்பு உதவி பொலிஸ் அத்தியட்சகர் எல்.ஆர். குமார ஸ்ரீ , காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் மற்றும் நகர சபை உறுப்பினர்கள், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன உறுப்பினர்கள், ஜம் இய்யதுல் உலமா சபை பிரதிநிதிகள் ,ஊர் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments