சம்பூரின்_இரண்டாவது_மாதிரி_கிராமத்தின்_அடிக்கல்_நடும்_நிகழ்வு

துரித கிராமிய வசந்தம்-2020 திட்டத்தின் கீழ் வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அமைச்சர் கௌரவ சஜித் பிரேமதாசவின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள 25 வீடுகளை கொண்ட சம்பூரின் இரண்டாவது மாதிரி கிராமத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு சம்பூர் பிரதேச ஐக்கிய தேசிய கட்சி பொறுப்பாளர் சண்முகநாதன் ஐயா தலைமையில் இடம்பெற்றது நிகழ்வின் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்றூப் கலந்து கொண்டார் .


இந்நிகழ்வில் கிண்ணியா நகர பிதா கௌரவ நளீம்,மூதூர் பிரதேச செயலாளர் முபாரக்,சம்பூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ராஜபக்ச,மூதூர் பிரதேச ஐக்கிய தேசிய கட்சி முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இப்பகுதியில் ஏற்கனவே அமைக்கப்பட்டுவரும் 25 வீடுகளை கொண்ட மாதிரி கிராமத்துக்கான வேலைகளும் துரிதமாக இடம்பெற்றுவருகின்றமை குறுப்பிடத்தக்கது.

No comments