இனவாதத்தை தூண்டுபவர்கள் மீது தராதிரம் பாராது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்

இனவாதத்தை தூண்டும் விதத்திலோ, இனங்களுக்கும் மதங்களுக்குமிடையில் அமைதியின்மையை ஏற்படுத்தும் விதத்திலோ நடந்து கொள்பவர்கள் மீது அமுலிலுள்ள அவசரகால சட்ட விதிமுறைகளுக்கேற்ப தராதிரம் பாராது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென பாதுகாப்பு அமைச்சு கூறுகிறது.

வன்செயலகளுக்கு தூண்டும் விதத்தில் அறிக்கைகள், ஊடக சந்திப்புகள், புகைப்படங்கள் அல்லது வேறு விதத்தில் அறிக்கைகளை வௌியிடும் ஆட்கள் தொடர்பில் அவதானித்து வருவதாக அறிவித்தலொன்றின் வாயிலாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதேபோன்று பொய்யான அறிக்கைகளை வௌியிடும், வதந்திகளைப் பரப்பும், அதற்காக எந்தவொரு விதத்திலாவது ஊடகங்களை பயன்படுத்தும் நபர்கள், குழுக்கள் அல்லது அமைப்புகளுக்கு எதிராக அவசர கால சட்ட விதிமுறைகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமென பாதுகாப்பு அமைச்சு கூறுகிறது.

பாதுகாப்புப் படையினரை தவறாக வழிநடத்தும் செய்திகளை வௌியிடும் மற்றும் செயற்படும் நபர்கள் , குழுக்கள் அல்லது அமைப்புகள் சம்பந்தமாக சட்டத்தை செயற்படுத்தவதாக மேற்படி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே, இவ்வாறான செயல்களிலிருந்து விலகி நிற்குமாறு பொதுமக்களுக்கும், குழுக்களுக்கும் மற்றும் அவற்றை வௌியிடும் நிறுவனங்களுக்கும் கடுமையக அறியத்தருவதாக பாதுகாப்பு அமைச்சு வௌியிட்டுள்ள அறிவித்தலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பல்வேறு சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரச்சாரம் செய்யும் நபர்கள் சம்பந்தமாக விசாரனை செய்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்கர் ருவன் குணசேகர கூறுகிறார்.

No comments