மதுபானத்துக்கான இலங்கையரின் ஒரு நாள் செலவு 97 கோடி


இலங்கையர் ஒரு நாளைக்கு மதுபானத்துக்கும் புகைத்தலுக்குமாகச் செலவிடும் தொகை 97 கோடி ரூபா என மதுபானம் மற்றும் போதைப் பொருள் தகவல் நிலையம் (ADIC) தெரிவித்துள்ளது.


இத்தகவல்களின்படி 50 கோடி ரூபா சாராயத்துக்கும், 9 கோடி ரூபா பியர் வகைகளுக்கும், 38 கோடி ரூபா புகைத்தலுக்கும் எனச் செலவிடப்படுவதாக இந்நிலையம் சுட்டிக் காட்டியுள்ளது.


கலால் திணைக்களத்தினதும், சிலோன் டுபாக்கோ கம்பனியினதும் தகவல்களை வைத்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.


இவற்றுள் புகைக்கும் பெண்களின் விகிதாசாரம் 0.1 வீதமாகவும், மது அருந்தும் பெண்கள் 0.5 வீதமாகவும் உள்ளனர். நாட்டிலுள்ள ஆண்களில் 34.8 வீதத்தினர் மது அருந்துபவர்களாகக் காணப்படுவதோடு, 29.4 வீதமான ஆண்கள் புகைபிடிப்பபவர்களாகவும் உள்ளனர் என மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.sor/mp

No comments