நியூசிலாந்து பள்ளிவாயிலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக UKஇல் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் NFGG யின் பிரதித் தவிசாளர் அப்துர்ரஹ்மான் பங்கேற்பு.


NFGGஊடகப் பிரிவு)

நியூசிலாந்து  பள்ளிவாயிலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக UKஇல் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் NFGG யின் பிரதித் தவிசாளர் அப்துர்ரஹ்மான் பங்கேற்பு.

நியூசிலாந்தின் க்ரைஸ்ட்சேர்ச் நகரில் பள்ளிவாயலில் வைத்து கடந்த மாதம் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான இரங்கல் கூட்டமொன்று 31.03.19 (நேற்று)  UKயில் நடைபெற்றது.

இவ்விரங்கல் கூட்டத்தில்  நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதித்தவிசாளர் பொறியியலாளர் MM. அப்துர் ரஹ்மான் அவர்களும் கலந்து கொண்டார்.அவருடன் NFGGயின்  UK செயற்குழு உறுப்பினர் சகோதரர் பாசிர் அவர்களும் கலந்துகொண்டார்.

"Interfaith Memorial Service for the Innocent Victims of New Zealand" என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற  இவ்விரங்கல் நிகழ்வு UK இன் Reading நகரில் நேற்று மாலை நடைபெற்றது. 

Reading பிரதேசத்திற்கான பாராளுமன்ற உறுப்பினர், பிரதி மேயர், சிவில் அமைப்புக்களின் தலைவர்கள், மதகுருமார்கள், பொலிஸ் பிரிவு பிரதிநிதிகள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.  

No comments