Rise srilanka நிறுவனத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி போன்ற அடர்த்தியான பிரதேசங்கள் எதிர்கொள்ளப்போகும் வாழ்நிலச்சவால்கள் மற்றும் அதனை எதிர்கொள்வதற்கான பொருத்தமான தீர்வுகள் தொடர்பான ஆய்வின் இடைக்கால அறிக்கை வெளியீடும் கலந்துரையாடலும்


-எம்.எச்.எம்.அன்வர்-

மேற்படி.தலைப்பின் கீழ் Rise Sri Lanka நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற முக்கியத்துவம் வாய்ந்த கலந்துரையாடல் 14.4.2019 மஞ்சந்தொடுவாய் விம்பிள்டன் கல்லூரி ஒன்றுகூடல் மண்டபத்தில் நிறுவனத்தின் பணிப்பாளர் கே.எம்.எம்.நவாஸ் தலைமையில் இடம்பெற்றது

இலங்கையில் இரண்டாவது சன அடர்த்திமிக்க எமது காத்தான்குடி பிரதேசம்  எதிர்கொள்ளும் வாழ்நிலச் சவால்கள் 

#காத்தான்குடி பிரதேசத்தின் சன்தொகைக்கேட்ப தற்போதுள்ள இடப்பற்றாக்குறை

#4.5 சதுர கிலோமீட்டருக்குள் 47125 பேர் சனத்தொகை வாழும் எமது பிரதேசத்தின் இன்றைய நிலை 

#வெளியிடங்களில் இடம்பெயர்ந்து வாழும் எமது மக்களின் அடிப்படை வசதியற்ற நிலைமைகள் 

#அரசியல் வாதிகளின் காணி தொடர்பான அசமந்தப்போக்குகள்

#சீதனக்கொடுமையும் அதிக செலவில் வீடு கட்டுவதன்  தாற்பரியங்கள்  

தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன 

மேற்படி நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக புவியியல் சரிதவியல் விரிவுரையாளர் ஜனாப் ஸாஹிர் sir கலந்துகொண்டு ஆய்வு அறிக்கையில் உள்ளடக்கப்பட.வேண்டிய விடயம் தொடர்பாக விரிவாக விளக்கமளித்தார்.

எமது மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள்  தொடர்பாக பிரதேசத்தின் முக்கிய  பிரமுகர்கள்  இதன்போது அழைக்கப்படிருந்தனர்.

1.காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ் எச் அஸ்பர்.  

2.நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதி தலைவரும் பொறியியலாளருமான ஏ.எல் அப்துர்ரஹ்மான்

3.முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தற்போதய நகர சபை உறுப்பினருமான யூ எல் எம் என் முபீன் 

4.Rise srilanka நிறுவனத்தின் உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஏ உவைஸ் LLB

ஆகியோரின் விஷேட சொற்பொழிவுடன் இந்நிகழ்வு இடம்பெற்றதுடன்  காத்தான்குடி போன்ற அடர்த்தியான பிரதேசங்கள் எதிர்கொள்ளப்போகும் வாழ்நிலச்சவால்கள் மற்றும் அதனை எதிர்கொள்வதற்கான பொருத்தமான தீர்வுகள்  தொடர்பாக இந்நிகழ்வில் கலந்துகொண்ட பிரமுகர்களால் பல்வேறு கருத்துக்களும் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments