சிறப்பாக இடம்பெற்ற ஹிழுறிய்யா வித்தியாலயத்தின் முப்பெரும் நிகழ்வுகள்..

(எம்.பஹ்த் ஜுனைட்)

காத்தான்குடி மட்/மம/ஹிழுறியா வித்தியாலயத்தின் முப்பெரும் நிகழ்வுகள் பாடசாலையின் அதிபர் எஸ்.ஐ.யஸீர் அறபாத் தலைமையில் வியாழக்கிழமை (11) ஹிழுறிய்யா பள்ளிவாயலில் இடம்பெற்றது.

இம் முப்பெரும் விழாவிற்கு மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி எஸ்.எம்.எம்.எஸ். உமர் மெளலானா பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசில்கள் வழங்கி வைத்தார்.

இந் நிகழ்வில் மாணவத் தலைவர்கள் மற்றும் வகுப்பு தலைவர்களுக்கு சின்னம் சூட்டியதுடன் முதலாம் தவணை பரீட்சை முன்னேற்ற அறிக்கை வழங்கப்பட்டு முதல் மூன்று நிலைகளை அடைந்த மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன் கடந்த வருடம் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டதுடன் இந்நிகழ்வில் கல்வி அதிகாரிகள், பிரமுகர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

No comments