மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சாரத்தில் ஈடுபட்டுவந்த பெண்கள் கைது திருகோணமலையில் சம்பவம்

திருகோணமலை மசாஜ் நிலையம் பொலிசாரால் சுற்றி வலைப்பு. மசாஜ் என்ற போர்வையில் நிலையத்தில் விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டு வந்த  பெண்களை பொலிசார் கைது செய்துள்ளனர்கைது செய்யப்பட்டவர்களை  திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான்  முன்னிலையில்  (10) ஆஜர்படுத்திய போது அவர்களை எதிர் வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலை அலஸ் தோட்டம் பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதிகள் நடாத்தப்பட்டு வருவதாக கடந்த மாதம் பிரதேச மக்கள் வீதி மறைத்து ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து மசாஜ் நிலையங்களை மூடுவதற்கு பொலிஸார் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வந்தனர்.

இதேவேளை அரசாங்கத்தினால் அனுமதிப்பத்திரம் வழங்கப்படாததையடுத்து  மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதிகளை நடாத்தி வந்த வேலை  ஏழு பெண்களை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பெண்களையும்  திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவர்கள் அனுராதபுரம், கண்டி குருநாகல் பகுதியைச் சேர்ந்த 23 மட்டும் 28 வயது உடையவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments