மர்ஹூம் அஷ்ஷெய்க் இஸ்மாயில் ஹஸரத் அவர்களின் இழப்பு கற்றறிந்த உலமாக்களுக்கு பேரிழப்பாகும் - கிழக்கு மாகான ஆளுநர் கலாநிதி ஹிஸ்புழ்ழாஹ் தெரிவிப்பு

அஷ்ஷெய்க் இஸ்மாயில் ஹஸரத் அவர்களின் மரணச்செய்தி கேட்டு நான் மிகவும் ஆழ்ந்த கவலையடைகிறேன்.

இலங்கை முஸ்லிம்களின் ஆத்மீக துறைகளில்  தன்னை முழுமையாக அர்பணித்து வாழ்நாள் முழுவதும் தப்லீக் ஜமாஆத் மூலமாக ஆரம்பகாலம் தொடக்கம் அந்த இயக்கத்தை வளர்த்தெடுப்பதிலும், மக்கள் மத்தியில் ஆன்மீகத்தை கொண்டுசெல்வதிலும் மிக தியாக சிந்தனையுடன் செயற்பட்டவர்.


எளிமையான வாழ்க்கை வாழ்ந்து தங்களின் மார்க்க பணிகளை செய்த ஒருவரின் ஜனாஸா செய்தி கேட்டு ஆழ்ந்த கவலையடைகிறேன். அவரின் இழப்பு முஸ்லீம் சமூகத்திற்கும், உலமாக்களுக்கும் ஏற்பட்ட பாரிய இழப்பாகும்.


நான் நாட்டிலே இல்லாததன் காரணமாக அவரின் ஜனாஸாவில் கலந்து கொள்ளமுடியவில்லை .

நாம் எல்லோரும் அவரின் மறுமை வாழ்விற்காக அல்லாஹ்விடத்தில் பிராத்திக்கவேண்டும். அல்லாஹ் அவர்களுக்கு சுவனத்தில் உயர்ந்த இடமான ஜன்னத்துல் பிர்தவ்ஸை வழங்குவானாக மேலும் அவரின் குடும்பத்தினர் , பிள்ளைகள் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் பொறுமையினை வழங்கவேண்டும் என பிராத்திக்கின்றேன் என்று கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏம். ஹிஸ்புழ்ழாஹ் தனது ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டார்.

No comments