விளையாட்டு பயிற்றுவிப்பாளர் நியமனம் தற்காலிகமாக ஒத்திவைப்பு-இம்ரான் மஹ்றூப் தெரிவிப்பு


எதிர்வரும் 29 ஆம் திகதி நடைபெறவிருந்த  விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்றூப் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்.

நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை மற்றும்  நியமனம் பெறவுள்ளோரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு எதிர்வரும் 29 ஆம் திகதி வழங்கப்படவிருந்த விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களுக்கான  நியமனம் வழங்கும் நிகழ்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த அசாதாரண நிலை நீங்கி நாட்டில் சுமூகமான சூழ்நிலை ஏற்பட்ட பின் பொருத்தமான திகதி ஒன்றில் இந்நியமனம் வழங்கப்படும்.

இந்நியமனம் வழங்கப்படவுள்ள திகதி தொடர்பான தகவல்கள் கல்வி அமைச்சால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

No comments