சீ.ஓ.லெஸ்தகீர் சர்வதேச பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி


(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
நிந்தவூர் சீ.ஓ.லெஸ்தகீர் சர்வதேசப் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி இம்முறையும் நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் அண்மையில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

மாகாண சபை மற்றும் உள்நாட்டலுவல்கள் பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இந்நிகழ்வில் சபாயா (நீலம்)டயமன்ட் (பச்சை)ரூபி (சிவப்பு) ஆகிய இல்லங்களிலிருந்து போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

சபாயா இதில் சபாயா இல்லத்திலிருந்து ஷெய்தா ஷெய்ரீன் றிழாவுல் ஹக் மௌலானா மற்றும் ஷெய்தா ஷெய்னப் றிழாவுல் ஹக் மௌலானா ஆகிய மாணவிகள் கலர் வோல் பிக்கிஹ் போட்டியில் முதலாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்று வெற்றிக் கேடயத்தோடு பதக்கம் மற்றும் சான்றிதழ்களுடன் காணப்படுவதையும், அதே இல்லத்தைச் சேர்ந்த மாணவன் இம்தியாஸ் அம்மார்  100 மீற்றர் ஓட்டப்போட்டியில் முதலாம் இடத்தினைப் பெற்று கேடயத்தைப் பெறுவதனையும் மற்றும் டயமன்ட்(பச்சை) இல்லத்திலிருந்து 50 மீற்றர் ஓட்டப்போட்டி மற்றும் வினோதஉடைப் போட்டிகளில் மாணவி ஹாரிஸ் ஷப்கா முதலாம் இடங்களைப் பெற்று வெற்றிக்கேடயத்தைப் பெறுவதனையும் மற்றும் றிழாவுல் ஹக் மௌலானா செய்தா ஷெய்னப்  கலர்வோல் பிக்கிஹ் போட்டியில் முதலாம் இடத்தைப் பெறுவதற்கு முயற்சிப்பதையும் படங்களில் காணலாம்.

இறுதியில் றிழாவுல் ஹக் மௌலானா செய்தா ஷெய்னப்  மூன்றாம் இடத்தைப் பெற்றுக் கொண்டார்.
போட்டியின் இறுதியில் டயமன்ட்(பச்சை) இல்லம் முதலாம் இடத்தினைப் பெற்று வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments