குரோதக் கருத்துக்களை பரப்பவேண்டாம்(டயானா)

சமூக வலைத்தளங்கள் ஊடாக குரோதத்தை ஏற்படுத்தும் கருத்துக்களை வெளியிட வேண்டாமென பேராயர் மெல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொழும்பு பேராயர் இல்லத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மக்களின் பாதுகாப்பு தொடர்பில் பேராயர் மெல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை மேற்கொண்டுள்ள தீர்மானங்களை பாராட்டுவதாக இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சங்கைக்குரிய இத்தேபானே தம்மாலங்கார தேரர் தெரிவித்துள்ளார்.

No comments