தற்கொலை குண்டு வெடிப்பு சம்பவத்தில் காயமுற்ற சகோதரர்களுக்காக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற இரத்ததான முகாம்!S.சஜீத்

நேற்றை தினம் துரதிஷ்டவசமாக இலங்கையில் பல பாகங்களிலும் இடம்பெற்ற  தற்கொலை குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 200க்கும்  அதிகமானோர் தங்களது உயிர்களை மாய்த்துக் கொண்டதோடு 500க்கும் அதிகமானவர்கள் காயமுற்று வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிக்சை பெற்றுவருகின்றனர். இதில் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தேவஸ்த்தான பூஜையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வேலையில் 27 பேர் மரணமடைந்ததுடன் 50க்கும் அதிகமானோர் காயமுற்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிக்சைபெற்று வரும் சகோதரர்களுக்காக வேண்டியும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் இரத்தப்பற்றாக்குறையினை நிவர்த்திசெய்யும் நோக்கிலும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் காத்தான்குடி ஆதார வைத்தியசாலை அதிகாரிகளோடு மேற்கொண்ட கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைவாக (22) இன்று திங்கட்கிழமை காத்தான்குடி ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் Dr.M.S.M. ஜாபீர் (MBBS) அவர்களின் தலைமையில் பாரிய இத்ததான முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்றது.


காத்தான்குடி தள வைத்தியசாலை இரத்த வங்கி பொறுப்பதிகாரி Dr. D. பிரபா சங்கர் அவர்கள் தலைமையிலான குழுவினர் இரத்ததான முகாமினை நடத்தினர்."உதிரம் கொடுத்து உயிர்காப்போம்" எனும் தொணிப் பொருளில் இடம்பெற்ற இவ் இரத்ததான முகாமில்   ஆண், பெண் இரு பலாரும் கலந்து கொண்டு 70க்கும் அதிகமானோர்  தங்களது இரத்தங்களை காத்தான்குடி ஆதார வைத்தியசாலை இரத்த வங்கிக்கு தானமாக வழங்கிவைத்தமை குறிப்பிடத்தக்கது.

No comments