ஜனாதிபதி தேர்தலே முதலில் நடைபெறும் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஃரூப் தெரிவிப்பு


தொழில்பயிற்சிகளை நிறைவு செய்யத இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (11) கிண்ணியா நூலகத்தில்   நடைபெற்றது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாட்டும் போது பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஃரூப்   " தேர்தலொன்று நடைபெற்றால் முதலில் ஜனாதிபதி தேர்தலே நடைபெறும் " என தெரிவித்தார் 

இன்று நாட்டில் எல்லோராலும் கேட்கப்படுகின்ற, பரவலாக பேசப்படுகின்ற ஒரு விடயம் இந்த நாட்டில் எவ்வாறான தேர்தலை எதிர்பார்களாம் என இந்த நேர்த்தில்  ஐக்கிய தேசிய கட்சியின் செயற்பாடுகள் பாராட்டத்தக்க கூடிய  வகையில் உள்ளது. வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிக்கின்ற சந்தர்பத்தில் கூட எத்தனையோ கருத்துக்கள் , வதந்திகள் பரப்பப்பட்டது ஐக்கிய தேசிய முன்னணியின் முலமாக பெரும்பான்மை வாக்குகளினால் வெற்றியீட்டியிருக்கின்றோம் 

மக்களுக்கு தெரியும்  எவ்வாறான விடயங்கள்  இந்த அரசாங்கத்தினால்  முன்னெடுக்கப்படுகின்றன என்ற விடயத்தில் மக்கள் தீர்மானித்திருக்கின்றார்கள் மிக விரைவிலே நாங்கள் எதிர் பார்க்கின்ற ஜனாதிபதி தேர்தலே  மிக விரைவில் நடைபெறும்  அந்த தேர்தலில் ஐகிய தேசிய கட்சியே அமோக வெற்றி பெறும் என  தெரிவித்தார் 

மேலும் உரையாட்டுகையில் 

ஜனாதிபதி  தேர்தலில் யார் வேட்பாளர் என்ற பிரச்சினை எல்லா கட்சியிலும் கேள்விக் குறியாக இருக்கின்றது ஆனால் எங்களுடைய ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை தீர்மானித்து விட்டோம் தேர்தல் வருகின்ற போது  யார் என்பதை தெரியப்படுத்துவோம் சுதந்திரக் கட்சியினறே யார் ஜனாதிபதி வேட்பாளர் என தீர்மானிப்பதில் குழப்பத்தில் இருக்கின்றார்கள் என உரையாட்டினார்

No comments